மத்திய அரசின் சூரிய ஆற்றல் நிறுவனத்தில் ரூ.40,000 முதல் ரூ 1,80,000 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, September 21, 2026

மத்திய அரசின் சூரிய ஆற்றல் நிறுவனத்தில் ரூ.40,000 முதல் ரூ 1,80,000 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!

 மத்திய அரசின் சூரிய ஆற்றல் நிறுவனத்தில் ரூ.40,000 முதல் ரூ 1,80,000 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!


மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், அட்டவணை ‘ஏ’அந்தஸ்து கொண்ட ‘நவரத்னா’பொதுத்துறை நிறுவனம் சூரிய ஆற்றல் நிறுவனம். நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வரும் இந்தியாவின் ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமலாக்க முகமைகளில்’ஒன்றாக எஸ்இசிஐ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் செப்.23-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 03/2026


பணி: Deputy Manager


காலியிடங்கள்: 3


சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000


தகுதி: 


பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சோலார், பவர் சிஸ்டம், கணினி அறிவியல், ஐடி போன்ற ஓரு துறையில் பிஇ., பிடெக் முடித்து 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


 35-க்குள் இருக்க வேண்டும்.


பணி: Accounts Officer


காலியிடம்: 1


வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 1,40,000


தகுதி: 


சிஏ, சிஎம்ஏ தேர்ச்சியுடன் நிதியியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் எம்பிஏ முடித்திருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Officer


பிரிவு : Legal -1


சம்பளம்:


 ஆண்டுக்கு ரூ.8.3 லட்சம்


வயதுவரம்பு:


 35-க்குள் இருக்க வேண்டும்.


பிரிவு: HR & Admin


காலியிடங்கள்: 2


வயது: 28-க்குள் இருக்க வேண்டும்.


சம்பம்: மாதம் ரூ.40,000 - 1,40,000


தகுதி: 


ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் எல்எல்பி அல்லது எச்ஆர்எம், ஐஆர், பணியாளர் மேலாண்மை, தொழிலாளர் நலன், தொழிலாளர் நிர்வாகம், தொழிலாளர் ஆய்வுகள் பிரிவில் எம்பிஏ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Engineer (Corporate Planning)


காலியிடம்: 1


வயதுவரம்பு:


 28-க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.40,0000 - 1,40,000


தகுதி: 


பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சியும், ஒரு ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Senior Engineer


காலியிடங்கள்: 11


சம்பளம்:


 ஆண்டுக்கு ரூ.9.9 -11.7 லட்சம்


வயதுவரம்பு:


 33-க்குள் இருக்க வேண்டும்.


தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Deputy Manager


காலியிடங்கள்: 7


வயதுவரம்பு:


 40- க்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்:


 ஆண்டுக்கு ரூ.11.47 -13.3 லட்சம் வரை


தகுதி: 


பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் தேர்ச்சியுடன் நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது சட்டப் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


 எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: 


பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ. 1000. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


 https://www.seci.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.9.2026


கூடுதல் விவரங்களுக்கு 


https://www.seci.co.in/uploads/careers/Final_notification_3-2026_24th_August12.pdf

No comments:

Post a Comment