பிராந்திய கிராம வங்கிகளில் 13,706 காலியிடங்களுக்கு ரூ 80,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு: கடைசி தேதி நீட்டிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, September 23, 2026

பிராந்திய கிராம வங்கிகளில் 13,706 காலியிடங்களுக்கு ரூ 80,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு: கடைசி தேதி நீட்டிப்பு

 பிராந்திய கிராம வங்கிகளில் 13,706 காலியிடங்களுக்கு ரூ 80,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு: கடைசி தேதி நீட்டிப்பு


வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection – IBPS) சார்பில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பிராந்திய கிராம வங்கிகளில் (Regional Rural Banks – RRBs) மொத்தம் 13,706 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


இந்த ஆட்சேர்ப்பில் அலுவலக உதவியாளர் (Office Assistant – Multipurpose), அதிகாரி நிலை-I / உதவி மேலாளர் (Officer Scale-I), அதிகாரி நிலை-II / மேலாளர் (Officer Scale-II) மற்றும் அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர் (Officer Scale-III) உள்ளிட்ட பதவிகள் இடம்பெற்றுள்ளன.


 இதில் தமிழ்நாடு கிராம வங்கியில் மட்டும் 464 காலியிடங்கள் உள்ளன. 


பதவிக்கு ஏற்ப Any Degree முதல் குறிப்பிட்ட துறை சார்ந்த பட்டப்படிப்பு, CA, MBA மற்றும் பணி அனுபவம் வரை கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பதவியைப் பொறுத்து சுமார் ₹35,000 முதல் ₹80,000 வரை மாத சம்பளம் கிடைக்கக்கூடும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி 27.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 27.09.2026 வரை IBPS அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


காலியிட விவரங்கள்


அலுவலக உதவியாளர்- 8,183


அதிகாரி நிலை-I / உதவி மேலாளர் - 4,256


அதிகாரி நிலை-II / மேலாளர் - 1,066


அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர்- 220


மொத்தம் -13,706


தமிழ்நாடு கிராம வங்கி – 464 காலியிடங்கள்


அலுவலக உதவியாளர்- 244


அதிகாரி நிலை-I / உதவி மேலாளர் - 90


அதிகாரி நிலை-II / மேலாளர் - 82


அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர்- 48


மொத்தம் -464


கல்வித்தகுதி 


அலுவலக உதவியாளர்


கல்வித் தகுதி:Any Degree


அதிகாரி நிலை-I / உதவி மேலாளர்


கல்வித் தகுதி:


Any Degree; IT, Forestry, Law, Marketing, Agriculture, Economics, Accountancy, Management, Finance உள்ளிட்ட தொடர்புடைய துறைகளில் Degree/Diploma பெற்றவர்களுக்கு முன்னுரிமை


அதிகாரி நிலை-II / மேலாளர்


கல்வித் தகுதி


Any Degree + குறைந்தது 50% மதிப்பெண்கள் + தேவையான வங்கி அனுபவம்


அதிகாரி நிலை-II – IT Officer


கல்வித் தகுதி


IT / Computer Science / Electronics தொடர்பான Degree + தேவையான அனுபவம்


அதிகாரி நிலை-II – CA


கல்வித் தகுதி


Chartered Accountant (CA) + தேவையான அனுபவம்


அதிகாரி நிலை-II – Law Officer 


கல்வித் தகுதி


Law Degree + தேவையான அனுபவம்


அதிகாரி நிலை-II – Treasury Manager


கல்வித் தகுதி


CA / MBA Finance + தேவையான அனுபவம்


அதிகாரி நிலை-II – Marketing Officer


கல்வித் தகுதி


MBA Marketing + தேவையான அனுபவம்


அதிகாரி நிலை-II – Agriculture Officer


கல்வித் தகுதி


Agriculture தொடர்பான Degree + தேவையான அனுபவம்


அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர்


கல்வித் தகுதி


Any Degree + தேவையான வங்கி / நிதி நிறுவன அனுபவம்


வயது வரம்பு


அலுவலக உதவியாளர்: 18 – 28 வயது


அதிகாரி நிலை-I / உதவி மேலாளர்:


18 – 30 வயது


அதிகாரி நிலை-II / மேலாளர்


21 – 32 வயது


அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர்


21 – 40 வயது


வயது தளர்வு:


SC/ST விண்ணப்பதாரர்கள்-5 ஆண்டுகள்


OBC விண்ணப்பதாரர்கள்-3 ஆண்டுகள்


PwBD (Gen/EWS) விண்ணப்பதாரர்கள்-10 ஆண்டுகள்


PwBD (SC/ST) விண்ணப்பதாரர்கள்-15 ஆண்டுகள்


PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்-13 ஆண்டுகள்


முன்னாள் இராணுவத்தினர் (Ex-Servicemen)-5 ஆண்டுகள்


சம்பள விவரம் 


அலுவலக உதவியாளர் (Office Assistant (Multipurpose)): ₹35,000


அதிகாரி நிலை-I / உதவி மேலாளர் (Officer Scale I (Assistant Manager)): ₹60,000


அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர் (Officer Scale-III (Senior Manager)): ₹80,000


தேர்வு முறை


அலுவலக உதவியாளர்


Preliminary Examination + Main Examination


அதிகாரி நிலை-I / உதவி மேலாளர்


Preliminary Examination + Main Examination + Interview


அதிகாரி நிலை-II / மேலாளர்


Single Online Examination + Interview


அதிகாரி நிலை-III / மூத்த மேலாளர்


Single Online Examination + Interview


Office Assistant மற்றும் Officer Scale-I பதவிகளுக்கு முதலில் Preliminary Examination நடைபெறும். தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்


SC / ST / PwBD / Ex-Servicemen- ₹175


மற்ற அனைத்து பிரிவினரும்- ₹850


கட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்


முக்கிய தேதிகள்


விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2026 (கடைசி தேதி நீட்டிப்பு)


Pre-Exam Training (PET): நவம்பர் 2026


Preliminary Examination: நவம்பர் / டிசம்பர் 2026


Preliminary Result: டிசம்பர் 2026 / ஜனவரி 2027


Main / Single Examination: டிசம்பர் 2026 / ஜனவரி 2027


விண்ணப்பிக்கும் முறை 


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் IBPS அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in-சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் ibps.in திறக்கவும்.


CRP RRBs XV  Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.


விண்ணப்பிக்க விரும்பும் Office Assistant / Officer Scale-I / Officer Scale-II / Officer Scale-III பதவியைத் தேர்வு செய்யவும்.


Click Here for New Registration என்பதைத் தேர்வு செய்யவும்.


பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட அடிப்படை விவரங்களைப் பதிவு செய்யவும்.


பெறப்படும் Registration Number மற்றும் Password-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.


கல்வித் தகுதி, வயது, முகவரி, Category உள்ளிட்ட விவரங்களைச் சரியாக உள்ளிடவும்.


புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.


பொருந்தும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.


விண்ணப்பத்தை முழுமையாகச் சரிபார்த்து Final Submit செய்யவும்.


விண்ணப்பப் படிவத்தை Download / Print செய்து எதிர்கால பயன்பாட்டிற்காக வைத்துக்கொள்ளவும்.


கடைசி தேதி நீட்டிப்பு அறிவிப்பு


https://www.ibps.in/wp-content/uploads/Approved_Corrigendum-for-Extension_CRP-RRBs-XV-002.pdf


அதிகாரப்பூர்வ அறிவிப்பு


https://www.ibps.in/wp-content/uploads/CRP-RRBs-XV-notification.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://www.ibps.in/index.php/rural-bank-xv/

No comments:

Post a Comment