பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிய 100 பணியிடங்களுக்கு ரூ 40,500 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, June 7, 2026

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிய 100 பணியிடங்களுக்கு ரூ 40,500 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரிய 100 பணியிடங்களுக்கு  ரூ 40,500 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக பி.எஸ்.என்.எல் உள்ளது. மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் காலியாக இருக்கக் கூடிய 100 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் விவரங்க்ளை பார்க்கலாம்.


பதவியின் பெயர்: ஜூனியர் டெலிகாம் ஆபிசர் (டெலிகாம்)


பணியிடங்கள்: கர்நாடகா- 26, மராட்டியம்- 16, கேரளா -15, மத்திய பிரதேசம்- 10, சென்னை- 5, தமிழகம் -1, ஒடிசா 6 உட்பட மொத்தம் 100 இடங்கள் உள்ளன.


கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்.,/ எம்.எஸ்சி.,


வயது வரம்பு: 3.7.2026- தேதியின் படி 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.


தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.


சம்பளம்: ரூ.16,400- 40,500 வரை


தேர்வு மையம்: சென்னை


விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்: ரூ. 2000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1000


விண்ணப்பிக்க கடைசிநாள்: 3.7.2026


விண்ணப்பிக்கும் முறை:


BSNL அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும். BSNL Recruitment Portal


“New Registration” என்பதை கிளிக் செய்து பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.


பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல்/ மொபைல் எண்ணிற்கு வரும் User ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.


விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, முகவரி உள்ளிட்ட தகவல்களை சரியாக நிரப்பவும்.


புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.


விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.


அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.


இறுதியாக விண்ணப்பத்தை Download செய்து வைத்துக் கொள்ளவும்.


தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு :


https://bsnlregistration.ibtexamination.com/AppO2BsNL_2026/notification/bsnl-jto-recruitment.pdf

No comments:

Post a Comment