ஆவின் நிறுவனத்தில் ரூ 43,000 ஊதியத்தில் 3 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Monday, June 1, 2026

ஆவின் நிறுவனத்தில் ரூ 43,000 ஊதியத்தில் 3 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..!

 ஆவின் நிறுவனத்தில் ரூ 43,000 ஊதியத்தில் 3 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..!


திருப்பூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு ஆட்கள்  நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள 3 கால்நடை மருத்துவர் ஆலோசகர் காலிப் பணியிடத்தை ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் பொருட்டு. 15/06/2026 அன்று காலை 11:00 மணியளவில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது கீழ்கண்ட கல்வித் தகுதி வாய்ந்த நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


அதன்படி, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி நிரப்பப்படுகிறது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு கல்வித்தகுதியை பொறுத்தவரை, B.V.Sc & AH With Computer Knowledge படித்திருக்க வேண்டும். சம்பளத்தை பொறுத்தவரை, மாதம் ரூ.43,000 வழங்கப்படும். போக்குவரத்து படியாக மாதம் ரூ.8,000, இன்சன்டிவாக ரூ.5,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி


ஆவின் பால் குளிரூட்டும் நிலையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை திருப்பூர்  என்ற முகவரியில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்து.  மேலும், தமிழில் எழுத மற்றும் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள பால் பண்ணைகளில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.


கணினி துறையில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும். இரு சக்கர வாகனம் /4 சக்கர வாகனம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி மற்றும் இதன் அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.


அறிவிப்பினைப் பார்க்க


https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2026/05/17800368061957.pdf


அதிகாரப்பூர்வ இணையதள முகவரி


https://tiruppur.nic.in/notice_category/recruitment/


No comments:

Post a Comment