ரிசர்வ் வங்கியில் பணிபுரிய 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு மாதம் ரூ.58,514 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, February 24, 2026

ரிசர்வ் வங்கியில் பணிபுரிய 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு மாதம் ரூ.58,514 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 ரிசர்வ் வங்கியில் பணிபுரிய 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு மாதம் ரூ.58,514  ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


வங்கிகளின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) காலியாக உள்ள 650 உதவியாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நாடு தழுவிய இரண்டு கட்ட போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரும் மார்ச் 8 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி மற்றும் இதர விவரங்கள் குறித்து பார்ப்போம்...


பணி: உதவியாளர்


காலியிடங்கள்: 650


சம்பளம்: மாதம் ரூ.58,514


தகுதி: 1.2.2026 தேதியின்படி ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


 1.2.2026 தேதியின்படி 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2.2.1998-க்கு முன்போ, 1.2.2006-க்கு பின்போ பிறந்தவர்களாக இருக்க கூடாது. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறன் பிரிவினர்களுக்கு 10 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, அதைத் தொடர்ந்து மொழித் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். வினாத்தாள் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில் அமைந்திருக்கும்.


தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடம்:


 முதல்நிலைத் தேர்வு மையம்: 


சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, விருதுநகர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், தர்மபுரி மற்றும் புதுச்சேரி


முதன்மைத் தேர்வு மையம்: 


சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், மதுரை, சேலம் மற்றும் புதுச்சேரி.


தேர்வு நடைபெறும் நாள்: 


தோராயமாக முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 11, முதன்மைத் தேர்வு ஜூன் 7 ஆம் தேதி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பக் கட்டணம்: 


எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறன் பிரிவினருக்கு ரூ.50, இதர அனைத்து பிரிவினருக்கு ரூ.450.


கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: 


www.rbi.org.in 


என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:


 8.3.2026


விண்ணப்பிப்போரின் முழுமையான விவரங்களுக்கு


 https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/DAASSISTANT2025CCB4E54CEB5542D9987FE6D1EA51D143.PDF

No comments:

Post a Comment