இந்து சமய அறநிலையத்துறையில் ரூ 50,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சென்னை மற்றும் கோவையில் உள்ள கோயில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், இரவு காவலர் உள்ளிட்ட பதவிகளில் ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் சென்னையில் உள்ள ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் திருக்கோயில், கோவையில் உள்ள தண்டுமாரியம்மன் திருக்கோயில் ஆகிய கோயில்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
துறையின் பெயர்
இந்து சமய அறநிலையத்துறை
பதவியின் பெயர்
அலுவலக உதவியாளர்
தட்டச்சர்
இரவு காவலர்
காலிப்பணியிடங்கள் 8
இணையதளம்
https://hrce.tn.gov.in/
அறிவிப்பு
தமிழ்நாடு கோயில் வேலைவாய்ப்பு 2025
சென்னை ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில்
சென்னை நங்கநல்லூரியில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு தட்டச்சர், பிளம்பர், அலுவலக உதவியாளர், மின்பணியாளர் ஆகிய பதவிகளில் தலா 1 பணியிடம் என 4 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
தகுதிகள்
விண்ணப்பதார்கள் 01.07.2025 தேதியின்படி, 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபடியாக 45 வயது வரை இருக்கலாம்.
தட்டச்சர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க இருக்க வேண்டும். தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை, ஆங்கிலத்தில் இளநிலை பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால், ஆங்கிலத்தில் முதுநிலை, தமிழில் இளநிலை பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாடு மற்ரும் அலுவலகத் தானியக்கத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பிளம்பர் பதவிக்கு அதற்கான ஐடிஐ தகுதிப் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மின்பணியாளர் பதவிக்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மின்சார உரிம வாரியத்தால் வழங்கப்பட்ட பி சான்றிதழை பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பளம்
தட்டச்சர் பதவிக்கு ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
பிளம்பர், அலுவலக உதவியாளர் மற்றும் மின்பணியாளர் பதவிகளுக்கு ரூ.12,600 முதல் ரூ.39,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
சென்னை காசி விஸ்வநாதர் திருக்கோயில்
வடபழநி ஆண்டவர் திருக்கோயிலின் உபகோயிலான சென்னை பரங்கிமலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் உள்ள எழுத்தர் மற்றும் காவலர் ஆகிய பதவிகளுக்கு தலா 1 காலிப்பணியிடம் நிரப்பப்படுகிறது.
தகுதிகள்
08.12.2025 தேதியின்படி, விண்ணப்பதார்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபடியாக 45 வயது வரை இருக்கலாம்.
எழுத்தர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர் பதவிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதுமானது.
சம்பளம்
எழுத்தர் பதவிக்கு ரூ.15,700 - 50,000 வரையும், காவலர் பதவிக்கு ரூ.11,600 முதல் 36,800 வரையும் சம்பளம் வழங்கப்படும்.
கோவை தண்டுமாரியம்மன் திருக்கோயில்
கோவை அவினாசி சாலையில் உள்ள தண்டுமாரியம்மன் திருக்கோயிலில் ஓதுவார் மற்றும் இரவுக்காவலர் பதவிகளில் தலா 1 காலிப்பணிடம் உள்ளன.
தகுதிகள்
01.07.2025 தேதியின்படி, 18 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
இரண்டு பதவிகளுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பது அவசியமாகும். ஓதுவார் பதவிக்கு சமய நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்தும் மூன்றாண்டு பாடப்பிரிவை முடித்தற்கான தேவாரப்பள்ளி வழங்குகின்ற சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
ஓதுவார் பதவிக்கு ரூ.12,600 முதல் 39,900 வரை சம்பளம் வழங்கப்படும்.
இரவுக்காவலர் பதவிக்கு ரூ.11,600 முதல் 36,800 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்து மதத்தை சார்ந்த தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை நிரப்பி தேவையான ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து அந்தந்த கோயில் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள்
வகுப்பு சான்றிதழ்
குடும்ப அடையாள அட்டை நகல்
முன்னுரிமைக்கான சான்றிதழ் நகல்
ஆதார் அட்டை நகல்
வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல்
இருப்பிட சான்றிதழ்
நன்னடத்தை சான்றிதழ்
சுயவிலாசமிட்ட ரூ.25-க்கான தபால் தலையுடன் கூடிய உறை
முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாட்கள்
ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில்
20.01.2026 மாலை 5.45 மணி வரை
காசி விஸ்வநாதர் திருக்கோயில்
09.01.2026 மாலை 5.45 மணி வரை
தண்டுமாரியம்மன் திருக்கோயில்
24.01.2026 மாலை 5.45 மணி வரை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்விற்கு அழைப்பு விடுக்கப்படுவார்கள். கூடுதல் விவரங்களை விண்ணப்பதார்கள் அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment