வங்கியில் 100 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
பொதுத்துறை வங்கி பணி எதிர்பார்ப்பவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக 122 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட தொடங்கியுள்ளது.
எஸ்பிஐ வங்கியில் மேனேஜர், டெபியூட்டி மேனேஜ்ர் ஆகிய பதவிகளில் மொத்தம் 122 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
டிஜிட்டல் பிளாட்பாம், கிரெட்டிட் அனலிஸ்ட் ஆகிய பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு முடித்தவர்கள், பொறியியல் படிப்பு, எம்பிஏ முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது.
பணியின் விவரங்கள்
பதவியின் பெயர்
மேனேஜர் (Credit Analyst)
மேனேஜர் (Products – Digital Platforms)
டெபியூட்டி மேனேஜர் (Products – Digital Platforms)
வயது வரம்பு
கிரெட்டிட் அனலிஸ்ட் பிரிவில் உள்ள மேனேஜர் பதவிக்கு ஆகஸ்ட் 31 தேதியின்படி, குறைந்தபட்சம் 25 முதல் அதிகபடியாக 35 வரை இருக்கலாம்.
டிஜிட்டர் பிளாட்பாம் பிரிவில் மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 28 முதல் 35 வயது வரையும், டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு 25 முதல் 32 வயது வரையும் இருக்க வேண்டும்.
வயது வரம்பில் ஒபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
கிரெட்டிட் அனலிஸ்ட் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் நிதி பிரிவில் எம்பிஏ, PGDBA / PGDBM/ MMS/ CA/ CFA/ ICWA ஆகியவை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 வருடம் அனுபவம் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டர் பிளாட்பாம் பிரிவில் உள்ள பதவிகளுக்கு ஐடி, கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ரூமெண்டேசன், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் ஆகியவற்றில்B.E. / B. Tech அல்லது கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டப்படிப்பு (MCA) ஆகியவற்றை 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்பிஏ படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும், மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 5 வருடமும், டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 3 வருடமும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
மேனேஜர் பதவிக்கு ரூ.85,920 முதல் அதிகபடியாக ரூ.1,05,280 வழங்கப்படும்.
டெபியூட்டி மேனேஜர் பதவிக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
எஸ்பிஐ வங்கியில் உள்ள மேனேஜர் மற்றும் டெபியூட்டி மேனேஜர் பதவிகளுக்கு தேர்வு கிடையாது. விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பதார்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தெரிவு செய்யபப்படுவார்கள். அவர்களுக்கு 100 மதிப்பெண்களுடன் நேர்காணல் நடைபெறும். அதில் தேர்ச்சி பெறும் நபர்களின் மெரிட் பட்டியல் வெளியிடப்படும். நேர்காணலுக்கான அழைப்பு இமெயில் மூலம் அனுப்பப்படும். மேலும், இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள்
https://sbi.bank.in/web/careers/current-openings
என்ற இணையதளத்தில் இமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கிய நிலையில், அக்டோபர் 2-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அறிவிப்பை பார்க்க
https://sbi.bank.in/documents/77530/52947104/ADV_CREDIT_ANALYST_CRPD_SC0_2025_26_11_11092025.pdf/eafb0dfe-8bad-23da-5caa-807fa77dd623?t=1757578325432
விவரம் மற்றும் தேதிகள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்:
11.09.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்:
02.10.2025
நேர்காணல்
தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
மெரிட் பட்டியல்
நேர்காணலுக்கு பின்னர் வெளியிடப்படும்.
எஸ்பிஐ வங்கியில் மேனேஜர் மற்றும் டெபியூட்டி மேனேஜராக பதவியில் பணி வாய்ப்பை பெற விரும்புகிறவர்கள் இந்த வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது என்பதால், தகுதியானவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.

No comments:
Post a Comment