தினமும் எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்? வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..! - Minnalseithi

Latest

Search This Blog

Friday, September 12, 2025

தினமும் எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்? வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

 தினமும் எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம்? வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!


வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடும்போது அதில் இருக்கும் நார்ச்சத்து காரணமாக வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.


வாழைப்பழம் ஊட்டச்சத்துமிக்கதாகவே இருந்தாலும் அதனை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும்.


 ஆரோக்கியமான நபர் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது. ஏனெனில் வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை அதிகமாகவே உள்ளன. 


உடல் எடை அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை தவிர்க்க மிதமான அளவு சாப்பிடுவதே முக்கியமானது.


 அதனை அதிகமாக சாப்பிடும்போது அதில் இருக்கும் நார்ச்சத்து காரணமாக வயிறு உப்புசம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.


* வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்காது.


* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயற்சிக்கிறீர்களா? வாழைப்பழங்கள் உதவும்.


 அதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது நிக்கோடின் ஏற்படுத்தும் ஏக்கங்களை குறைக்க உதவும்.


* வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.


* மன அழுத்தமாகவோ, சோகமாகவோ உணர்கிறீர்களா? வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, செரோடோனின் மற்றும் டோபமைன் என்ற நல்ல ரசாயனங்களை உற்பத்தி செய்ய மூளையை ஊக்கப்படுத்தும். எனவே பரபரப்பாக இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்தவும், கடினமான தருணங்களை நிர்வகிக்கவும் உதவிடும்.


* பகலில் சோர்வாக உணர்ந்தால், உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கலாம். வாழைப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் அதிக ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும். ரத்த சோகையை எதிர்த்து போராடவும் வித்திடும்.

No comments:

Post a Comment