தமிழ்நாடு வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் Degree, Diploma, B.E/B.Tech முடித்தவர்களுக்கு ரூ 70,000 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மாநில வனத்தீ கட்டுப்பாட்டு மையம் சார்பில் காலியாக உள்ள GIS Expert, System Analyst / IT Manager, Network & Communication Technician, Technical Assistant மற்றும் Wireless Operator உள்ளிட்ட மொத்தம் 09 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு பதவியின் அடிப்படையில் Degree, Diploma, B.E./B.Tech உள்ளிட்ட கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாதம் ₹22,020 முதல் ₹70,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 26.09.2026 இரவு 09.00 மணி வரை TNSFFCC-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
1.GIS Expert
காலிப் பணியிடங்கள்:2
கல்வித் தகுதி / அனுபவம்
GIS Expert Remote Sensing,Forestry,
Geography, Geoinformatics அல்லது தொடர்புடைய துறையில் Bachelor’s / Master’s Degree. GIS & Remote Sensing-ல் PG Diploma / Diploma கூடுதல் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படலாம்.
2–3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம்.
சம்பளம்
மாதம் ₹65,000
அதிகபட்ச வயது வரம்பு
35 வயதுக்குள் இருக்க வேண்டும்
2.System Analyst / IT Manager
காலிப்பணியிடங்கள்:1
கல்வித் தகுதி
B.E./B.Tech (CS/IT/ECE) அல்லது MCA அல்லது M.Sc. Computer Science / IT.
2–3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம்.
சம்பளம்:₹70,000
வயது வரம்பு:35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3.Network & Communication Technician
காலிப்பணியிடங்கள்:1
கல்வித் தகுதி
Electronics, Telecommunication, CS/IT அல்லது தொடர்புடைய துறையில் Diploma / Graduation. Communication Systems / Network Infrastructure
துறையில் 2–3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம்.
சம்பளம்
₹50,000
வயது வரம்பு
35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
4.Technical Assistant (GIS)
காலிப்பணியிடங்கள்:1
கல்வித் தகுதி
Geography, Geoinformatics, CS/IT துறையில் Graduation.
2–3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம்.
சம்பளம்: ₹35,750
வயது வரம்பு
35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
5.Technical Assistant (Graphical Designer)
காலிப்பணியிடங்கள்:01
கல்வித் தகுதி
Multimedia, Graphic Design, Fine Arts, Visual Communication துறையில் Graduation.
2–3 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம் அவசியம்.
சம்பளம்:₹35,750
வயது வரம்பு
35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
6.Wireless Operator
காலிப்பணியிடங்கள்:03
கல்வித் தகுதி
ஏதேனும் ஒரு துறையில் Graduation அல்லது Radio Communication / Telecommunication / Wireless Communication / Electronics தொடர்பான Diploma / Certification.
சம்பளம்:₹22,020
வயது வரம்பு
35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை
பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நிலை
Shortlisting
தகுதி மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
Interview
Shortlist செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம் :கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி:
26.09.2026, 09:00 PM
விண்ணப்பிக்கும் முறை
முதலில் TNSFFCC-ன் அதிகாரப்பூர்வ Recruitment இணையதளமான https://tnforestfire.com/recruitment பக்கத்திற்குச் செல்லவும்.
Recruitment பக்கத்தைத் திறந்த பிறகு, பக்கத்தின் கீழ்ப்பகுதிக்கு (Bottom) Scroll Down செய்து, “Apply Online” என்ற பொத்தானைக் கிளிக் செய்யவும்.
அடுத்ததாக விண்ணப்பப் பக்கத்தில் “Enter your e-mail address” பகுதியில் உங்கள் சரியான மின்னஞ்சல் முகவரியை (Email ID) உள்ளிட்டு Login / Sign In செய்யவும்.
Login செய்த பிறகு, நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியைத் தேர்வு செய்து, அந்தப் பதவிக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பணி அனுபவம் உள்ளிட்ட தகுதி நிபந்தனைகளை ஒருமுறை சரிபார்க்கவும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, பணி அனுபவம், தொடர்பு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரியாகப் பதிவு செய்யவும்.
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை Upload செய்யவும்.
விண்ணப்பத்தை Submit செய்வதற்கு முன், பதிவு செய்த அனைத்து தகவல்களையும் கவனமாகச் சரிபார்க்கவும்.
குறிப்பாக Email ID, கல்வித் தகுதி, வயது மற்றும் பணி அனுபவ விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யவும்.
அனைத்து விவரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்த பிறகு Submit / Apply என்பதை கிளிக் செய்து விண்ணப்பத்தை வெற்றிகரமாக சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு கிடைக்கும் Application Form / Application Number உள்ளிட்ட விவரங்களைப் பதிவிறக்கம் செய்து, அதன் Print அல்லது PDF நகலை எதிர்கால பயன்பாட்டிற்காக பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://www.forests.tn.gov.in/frontend/gos/DOC-20260913-WA00059.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://tnforestfire.com/recruitment

No comments:
Post a Comment