CPCL நிறுவனத்தில் பணிபுரிய 60 பணியிடங்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு
சென்னையில் உள்ள Chennai Petroleum Corporation Limited (CPCL) நிறுவனத்தில் Junior Engineering Assistant (JEA)-IV பணிக்கு 60 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் Diploma மற்றும் B.Sc Chemistry படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பணிக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். SC/ST, OBC உள்ளிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படுகிறது.
Diploma அல்லது B.Sc Chemistry கல்வித்தகுதியுடன் 3 ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு CBT மற்றும் Skill, Proficiency and/or Physical Test (SPPT) ஆகிய முறைகளில் நடைபெறும். SC/ST, பெண்கள், Ex-Servicemen மற்றும் PwBD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்றவர்களுக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் 14.08.2026 முதல் 11.09.2026 வரை ஆன்லைனில் பெறப்படுகின்றன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் CPCL-ன் அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதி மற்றும் விதிமுறைகளை முழுமையாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
Computer Based Test (CBT)
Skill, Proficiency and/or Physical Test (SPPT)
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:
14.08.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி:
11.09.2026
விண்ணப்பிக்கும் முறை:
CPCL Official Website செல்லவும்.
Careers → Recruitment of Non-Executive Personnel என்பதை தேர்வு செய்யவும்.
Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
புதிய Registration செய்து User ID / Password உருவாக்கவும்.
தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவ விவரங்களை சரியாக உள்ளிடவும்.
தேவையான சான்றிதழ்கள் / புகைப்படம் / கையொப்பம் ஆகியவற்றை upload செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் இருந்தால் Online Payment செய்யவும்.
விண்ணப்பத்தை Submit செய்யவும்.
இறுதியாக Application Form ஐ download செய்து வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க
https://www.cpcl.co.in/wp-content/uploads/2026/08/Detailed-Adertisement-for-Recruitment-of-Non-Executive-Personnel-2026.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://cpcl.onlineregistrationform.org/TNCPCL/index.action

No comments:
Post a Comment