ரைட்ஸ் நிறுவனத்தில் 15 பணியிடங்களுக்கு ரூ 66,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பத் துறைகளில் ஒரு முதன்மையான, பல்துறை சார்ந்த ஆலோசனை மத்தியப் 'நவரத்னா' பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 15 உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant(HR)
காலியிடங்கள்: 15
சம்பளம்: 20,000 - 66,000
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.300. இடபுள்யுஎஸ், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.rites.com
என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
27.4.2026
மேலும் விவரங்களுக்கு
https://rites.com/Upload/Career/Final_Asst_HR_ad_pdf-2026-Mar-20-10-35-2.pdf

No comments:
Post a Comment