BSNL நிறுவனத்தில் 120 பணியிடங்களுக்கு ரூ 50,500 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு
பி.எஸ்.என்.எல் எனப்படும் பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இன்ஜினியரிங் அல்லது சி.ஏ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் சீனியர் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 120 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 15.04.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
சீனியர் எக்ஸிக்யூடிவ் டிரெய்னி (Senior Executive Trainee)
காலியிடங்களின் எண்ணிக்கை – 120
Telecom
காலியிடங்களின் எண்ணிக்கை – 95
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electronics and Telecommunications/ Electronics/ Computer Science/ Information Technology/ Electrical/ Instrumentation பிரிவில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
Finance
காலியிடங்களின் எண்ணிக்கை – 25
கல்வித் தகுதி: Chartered Account/ Cost & Management Accountancy படித்திருக்க வேண்டும்.
வயதுத்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 24,900 – 50,500
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான
https://bsnlregistration.ibtexamination.com/
என்ற பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2026
முன்னதாக இந்தப் பணியிடங்களுக்கு மார்ச் 31 விண்ணப்பிக்க கடைசி தேதியாக இருந்தது. தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு ஏப்ரல் 15 கடைசி தேதியாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு
https://bsnlregistration.ibtexamination.com/App2O26_BSNL/notification/bsnl-senior-executive-trainee-recruitment_update2.pdf
Online இல் விண்ணப்பிக்க
https://bsnlregistration.ibtexamination.com/App2O26_BSNL/
முழுமையான விவரங்களுக்கு
https://bsnlregistration.ibtexamination.com/PDF/SET-NOTIFICATION-FINAL.pdf

No comments:
Post a Comment