இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை கணக்காளர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு
இந்தியாவின் முன்னணி துறைமுகங்களில் ஒன்றான சென்னை காமராஜர் துறைமுகத்தில் இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை கணக்காளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 14 பணியிடங்கள். இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.03.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Junior Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 27.02.2026 அன்று 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 25,250 - 50,500
Junior Accountant
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வித் தகுதி:
B.Com படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 27.02.2026 அன்று 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 25,250 - 50,500
வயது வரம்பு தளர்வு:
மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
https://kamarajarport.in/CareerSection
என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது பிரிவினருக்கு ரூ. 200,
ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவுகளுக்கு ரூ. 150,
எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கு ரூ. 100,
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
28.03.2026
முழு விவரங்களுக்கு
https://kamarajarport.in/public/assets/docs/uploads/career_images/1772174476_0f74da52958d8795c4c4.pdf
எப்படி விண்ணப்பிப்பது?
https://kpl.cbtexam.in/Home/How%20to%20Apply%20_KPL.pdf
விண்ணப்பிக்க
https://kpl.cbtexam.in/

No comments:
Post a Comment