என்எல்சி-ல் பணிபுரிய 16 பணியிடங்களுக்கு ரூ 38,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, March 26, 2026

என்எல்சி-ல் பணிபுரிய 16 பணியிடங்களுக்கு ரூ 38,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 என்எல்சி-ல்  பணிபுரிய 16 பணியிடங்களுக்கு ரூ 38,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் ஒரு முன்னணி ‘நவரத்னா’ பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 16 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் ஏப்ரல் 2 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அறிவிப்பு எண்.02/ 2026


பணி: Health Inspector


காலியிடங்கள்: 16


சம்பளம்: மாதம் ரூ.38,000


தகுதி: 


பிளஸ் 2 தேர்ச்சியுடன் Sanitary Inspector, Health Inspector போன்ற ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருப்பதுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயதுவரம்பு: 


1.2.2026 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகைகள் வழங்கப்படும்.


தேர்வு செய்யப்படும் முறை: 


எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்: 


பொது, ஓபிசி, இடபுள்யுஎஸ் பிரிவினருக்கு ரூ.450, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ரானுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.200. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


 http://www.nlcindia.in


 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:

 2.4.2026

முழு விவரங்களுக்கு 


https://www.nlcindia.in/nlcilapi/cmp/downloadfile/jGP0g5r5FISAbQNEf4PzG198sMU1LKu2dC_Ng0_tANY=


Online யில் விண்ணப்பிக்க 

https://web.nlcindia.in/rec022026/index.php

No comments:

Post a Comment