தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 122 பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, March 26, 2026

தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 122 பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..!

 தேசிய தொழில்நுட்ப கழகத்தில் 122  பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு..!


தேசிய தொழில்நுட்ப கழகம்(என்ஐடி) திருச்சியில் காலியாக உள்ள 122 பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஏப்ரல் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


அறிவிப்பு எண். NITT/R/F/L10/2026/01


பணி: Professor


காலியிடங்கள்: 2


பணி: Associate Professor


காலியிடங்கள்: 15


பணி: Assistant Professor


காலியிடங்கள்: 105


சம்பளம்: என்ஐடி விதிமுறைகளின்படி வழங்கப்படும்.


வயதுவரம்பு:


 உதவிப் பேராசிரியர் பணிக்கு 35-க்குள் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு வயதுவரம்பில் கிடையாது.


தகுதி: 


Engineering, Humanities, Science, Management, Architecture, Education போன்ற ஏதாதொரு துறையில் அல்லது அதற்கு இணையான துறையில் முதல் வகுப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றும், முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது GATE,UGC NET,CSIR-NET போன்ற தேர்வுகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.



தேர்வு செய்யப்படும் முறை: 


தகுதி, பணி அனுபவம், கற்பிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து விவரம் தகுதியானவர்களுக்கு அவர்களது மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை: 


www.nitt.edu என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


 ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு, பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


The Registrar, National Institute of Technology, Trichy - 620 015


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 6.4.2026


ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் வந்து சேர கடைசி நாள்: 16.4.2026


மேலும் விவரங்களுக்கு 


https://www.nitt.edu/home/other/jobs/faculty_recruitment_2026/

No comments:

Post a Comment