தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி எப்போது அறிவிக்க வாய்ப்பு? - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, March 15, 2026

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி எப்போது அறிவிக்க வாய்ப்பு?

 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி எப்போது அறிவிக்க வாய்ப்பு?


தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தேதி மார்ச் 17-ம் தேதி மாலை 3 மணிக்கு வெளி​யாக வாய்ப்​புள்​ள​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.


தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை நியாய​மாக​வும், நேர்​மை​யாக​வும், அமை​தி​யாக​வும் நடத்த, தமிழகம் முழு​வதும் மாவட்ட அளவில் மேற்​கொள்ளப்​பட்ட முன்​னேற்​பாடு​கள் தொடர்​பாக அறிவதற்​காககடந்த பிப்​.26-ம் தேதி தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் சென்னை வந்​தார்.


அப்போது, தமிழக தலை​மைத் தேர்​தல் அதிகாரி அர்ச்​சனா பட்​நாயக், அனைத்து மாவட்ட ஆட்சி​யர்​கள், எஸ்​பிக்​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்சி பிர​தி​நி​தி​களிட​மும் கருத்​துகளை கேட்​டறிந்​தார்.


அதை தொடர்ந்​து, தமிழகத்​தில் உள்ள 234 தொகுதிகளுக்​கும் தேர்​தல் நடத்தும் அலுவலர்​கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலை​யில் அவர்​களுக்​கும், தகவல் தொழில்​நுட்ப உதவிப் பணி​யாளர்களுக்​கும் ஆணைய செயலிகளை இயக்க பயிற்சி அளிக்கப்பட்டது. துணை ராணுவப் படை​யினரும் படிப்​படி​யாக தமிழகம் வந்​தவண்​ணம் உள்​ளனர். இந்​நிலை​யில் தேர்​தல் தேதி, மார்ச் 17-ம்தேதி மாலை 3 மணிக்கு வெளி​யாக வாய்ப்​புள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.


இதற்​கிடை​யில், அனைத்து மாவட்​டங்​களி​லும் தேர்​தல் அலு​வலர்​களுக்கு தபால் வாக்​கு, மின்​னணு பரி​மாற்ற தபால் வாக்​கு​களை கையாள்​வது குறித்து பயிற்​சி வழங்​கப்​பட்​டு வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

No comments:

Post a Comment