தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு...! - Minnalseithi

Latest

Search This Blog

Sunday, March 15, 2026

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு...!

 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு  அறிவிப்பு...!


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பட்டப்படிப்பு, என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.


தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) உள்ளது. தமிழகத்தில் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலா பயணிகளுக்கான பேருந்து சேவை உள்ளிட்ட பணிகளை சுற்றுலா வளர்ச்சி கழகம் மேற்கொண்டு வருகிறது.


பணியிடங்கள் விவரம்:


அரசு பொதுத்துறை நிறுவனமாக உள்ள இந்த டிடிடிசியில் 04 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் யார்? கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.


* இளநிலை கட்டிடக்கலைஞர் - 01


* சைட் என்ஜினியர் (சிவில்) - 02


* AGM (மார்க்கெட்டிங்) - 01


கல்வித் தகுதி:


* ஜூனியர் ஆர்க்கிடெக் எனப்படும் இளநிலை கட்டிடக் கலைஞர் பணிக்கு கட்டிடக்கலை துறையில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


* சைட் என்ஜினியர் பணிக்கு சிவில் என்ஜினியரிங் பிரிவில் 5 ஆண்டுகள் பட்டப்படிப்பு அவசியம்.



* ஏஜிஎம் (மார்க்கெட்டிங்) பணிக்கு எம்பிஏ மார்க்கெட்டிங்/ சுற்றுலாத்துறை/ வணிக நிர்வாகம் ஆகிய ஏதேனும் ஒன்றை எடுத்து படித்து இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


தேர்வு முறை:


தகுதியான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து நேர்முகத்தேர்வுக்கு அழைப்பார்கள். நேர்முகத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க வரும் 23.03.2026 கடைசி நாள் ஆகும்.



 https://ttdconline.com/



 இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


தேர்வு அறிவிப்பினை தேர்வர்கள் கவனமாக படித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்த பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். தேர்வு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதி இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு 


https://tamilnadujobnews.in/wp-content/uploads/2026/03/TTDC-Short-Notification.webp


ஆன்லைன் விண்ணப்பம் பெற 


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSewLmDztAgObL9A4Jubyl6gUTNcL8Np9f2l4vn_CQ9V8v0CeA/viewform

No comments:

Post a Comment