தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பள்ளியில் ரூ 25,000 முதல் ரூ 56,900 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, March 14, 2026

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பள்ளியில் ரூ 25,000 முதல் ரூ 56,900 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!

 தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பள்ளியில் ரூ 25,000 முதல் ரூ 56,900 வரை ஊதியத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!


திருப்பூரில் உள்ள மத்திய அரசு பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.57 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.


திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் மத்திய அரசுக்கு சொந்தமான சைனிக் பள்ளி உள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உண்டு உறைவிடப் பள்ளிகளாக இவை உள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இந்த பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.


சைனிக் பள்ளியில் காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.


பணியிடங்கள் விவரம்:


பொது ஊழியர் (MTS) - 13


PEM/PTI - மேட்ரன் (பெண்) (ஒப்பந்த அடிப்படை) - 01


வார்டு பாய்ஸ் (ஒப்பந்த அடிப்படை) - 03


என மொத்தம் 17 காலியிடங்கள் உள்ளன.


10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, மாணவர்களைப் பராமரிப்பதில் ஆர்வமும் உடல்தகுதியும் கொண்ட இந்தியக் குடிமக்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 21 முதல் 50 வயதிற்குட்பட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் மற்றும் வரைவோலையுடன் (Demand Draft) வரும் 31.03.2026-ம் தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கல்வித் தகுதி:


எம்.டிஎஸ் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். எலக்ட்ரிஷியன், பிளம்பரிங், டிரைவிங், டெய்லர், சிசிடிவி மெயிண்டனஸ் உள்ளிட்ட துறையில் கல்வித் தகுதியோ, அனுபவமோ இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி தெரிந்து இருக்க வேண்டும். நல்ல உடல் தகுதி பெற்று இருக்க வேண்டும்.


* பிஇஎம், பிடிஐ - மேட்ரான் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். ஆங்கிலம் பேச தேரிந்து இருக்க வேண்டும். உறைவிட பள்ளிகளில் மானவர்களை கையாளும் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.


* வார்ட் பாய்ஸ் பணிக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி பெற்று இருக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆங்கிலம், இந்தி/ தமிழ் முடித்து இருக்க வேண்டும். தேர்வர்கள் கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


வயது வரம்பு:


01.05.2026 தேதிப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். 21 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.


சம்பளம் எவ்வளவு?


பொது ஊழியர் (MTS) - நிலை-1 ரூ.18,000 - 56,900/-


PEM/PTI - மேட்ரன் (பெண்) - ரூ.25,000/-


வார்டு பாய்ஸ் (ஒப்பந்த அடிப்படை) - ரூ.22,000/- முதல் ரூ.25,000/- வரை


திறன்/தொழில் தேர்வுகள் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்:


ST/SC விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200/-


மற்ற விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500/-


கட்டண முறை: ஆன்லைன்


மேலும் முழு விவரங்களுக்கு


https://www.sainikschoolamaravathinagar.edu.in/careers.php



விண்ணப்ப படிவம் பெற


https://www.sainikschoolamaravathinagar.edu.in/assets/Application.pdf


சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளில் செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்ப்பட உள்ளனர்


Written Exam


Skill/Trade tests


Personal Interview


உடல் தகுதி:

 விண்ணப்பதாரர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் (Medically Fit) இருத்தல் அவசியம்.


முன்னுரிமை: உறைவிடப் பள்ளிகள் (Residential Schools) அல்லது பெரிய கல்வி நிறுவனங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


டிடி (DD) எடுக்க வேண்டிய விவரங்கள்:


வரைவோலை (Demand Draft) எடுக்கும்போது பின்வரும் பெயரையும், வங்கியின் கிளையையும் சரியாகக் குறிப்பிடுவது அவசியம்.


யாருடைய பெயரில் எடுக்க வேண்டும்?


 (Favor of): ‘PRINCIPAL, SAINIK SCHOOL, AMARAVATHINAGAR’


பணம் செலுத்த வேண்டிய வங்கி


 (Payable at): State Bank of India (SBI), Amaravathinagar.


வங்கி கிளை குறியீடு (Branch Code): 2191


இடம்:


 உடுமலைப்பேட்டை தாலுகா, திருப்பூர் மாவட்டம்.


1.விண்ணப்பத்துடன் இணைத்தல்:


 வங்கியில் டிடி (DD) எடுத்த பிறகு, அதன் அசல் பிரதியை (Original DD) உங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து தபாலில் அனுப்ப வேண்டும்.


2.டிடி-யின் பின்புறம்: பாதுகாப்பிற்காக, டிடி-யின் பின்புறத்தில் உங்களது பெயர், முகவரி மற்றும் நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரை பென்சிலால் அல்லது பேனாவால் தெளிவாக எழுதவும்.


3.செல்லுபடியாகும் காலம்: டிடி எடுத்த தேதியிலிருந்து 3 மாதங்களுக்குள் அது சம்பந்தப்பட்ட அலுவலகத்தைச் சென்றடைவதை உறுதி செய்யவும்.


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:


 06.03.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 31.03.2026


சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள், இப்பணியிடங்களுக்குத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்கள், இப்பணியிடங்களுக்குத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


 விண்ணப்பப் படிவம் பள்ளியின் இணையதளமான


 www.sainikschoolamaravathinagar.edu.in 


இல் கிடைக்கும்.


1. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 


Principal,


 Sainik School


 Amaravathinagar, 


Pin – 642102,


 Udumalpet Taluk,


 Tiruppur District, 


Tamil Nadu.


விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:


உங்கள் விண்ணப்பப் படிவத்துடன் பின்வரும் ஆவணங்களைச் சரியாக இணைப்பதை உறுதி செய்யவும்.


புகைப்படம்:


 விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.


கல்விச் சான்றுகள்:


 10-ஆம் வகுப்பு முதல் நீங்கள் பெற்றுள்ள உயர்கல்வி வரை அனைத்து மதிப்பெண் பட்டியல்கள் (Mark Sheets) மற்றும் சான்றிதழ்களின் நகல்கள்.


அனுபவச் சான்றிதழ்


பணி அனுபவம் இருப்பின் அதற்கான சான்றிதழ் அல்லது Testimonial நகல்கள்


சுய கையொப்பம் (Self Attestation)


 இணைக்கப்படும் அனைத்துச் சான்றிதழ் நகல்களிலும் உங்கள் கையொப்பம் இட்டிருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் (DD)


 மேற்சொன்ன விவரப்படி எடுக்கப்பட்ட அசல் டிடி (Demand Draft) இணைக்கப்பட வேண்டும்.


Gen / OBC: ₹500


SC / ST: ₹200


ஜாதிச் சான்றிதழ்:


 SC / ST

 விண்ணப்பதாரர்கள் கட்டணச் சலுகை பெற, தங்களின் ஜாதிச் சான்றிதழ் நகலை அவசியம் இணைக்க வேண்டும்.


3. அஞ்சல் கவரின் மேல் எழுத வேண்டியவை:


விண்ணப்பம் அடங்கிய தபால் உறையின் (Envelope) மேல், நீங்கள் விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தெளிவாகவும், பெரிய எழுத்துக்களிலும் (BOLD) எழுத வேண்டும்.


 உதாரணம்:


 “APPLICATION FOR THE POST OF GENERAL EMPLOYEE (MTS)”

No comments:

Post a Comment