சுவையான குலாப் ஜாமூன் செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, November 7, 2026

சுவையான குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

 சுவையான குலாப் ஜாமூன் செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்


குலாப் ஜாமுன் மாவு- 1 கப்


சர்க்கரை- 1 கப் (சுமார் 200-250 கிராம்)


தண்ணீர்- 1 கப் முதல் 1¼ கப் வரை (சுமார் 200-250 மி.லி)


ஏலக்காய் 2-3 (தட்டியது)


நெய் / எண்ணெய்- பொரிப்பதற்குத் தேவையான அளவு


சிறிதளவு பால்


செய்முறை 


குலாப் ஜாமுன் மாவை சிறிதளவு பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். 


ஒரேடியாக  தண்ணீர் ஊற்றாமல், சிறிது சிறிதாக ஊற்றி அழுத்தம் கொடுக்காமல் பிசைய வேண்டும்.


 சப்பாத்திக்கு பிசைவது போல் அழுத்தம் கொடுத்து பிசைந்தால் குலோப்ஜாமுன் சாப்டாக வராது.


 மேலும் உள்ளே இருக்கும் மாவும் அழுத்தம் கொடுப்பதால் வேகாமல் போய் விட வாய்ப்புகள் உள்ளது.


சில நிமிடங்கள் கழித்து கையில் நெய் தடவிய சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.


அடுப்பை மீடியம் ப்ளேமில் வைத்துக் கொண்டு, சமையல் எண்ணெயையும் மிதமான சூட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு உருண்டைகளாக மெதுவாகப் போட்டு வரவேண்டும். ஒரேடியாக நிறைய உருண்டைகளை போடாதீர்கள். இரண்டு விநாடிக்கு ஒரு உருண்டைகள் என்று போட்டுக் கொண்டே வாருங்கள். உருண்டைகள் பொரிந்து வர அதற்கேற்றார் போல் திருப்பி விடுங்கள். எல்லா பக்கமும் ஒரு சேர பொன்நிறமாக சிவக்க எடுத்து  வைத்துக் கொள்ளவும்.



ஒரு பாத்திரத்தில் கொடுக்கபட்டுள்ள அளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பின் ஏலக்காய் தட்டி சேர்க்கவும். 10-15 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.


 தயாரான ஜீரா ஆறியதும் ஜாமுன் உருண்டைகளை சேர்க்கவும். 2-3 மணி நேரம் ஊற வைக்கவும்.


இப்போது சுவையான குலாப் ஜாமுன் தயார்.

No comments:

Post a Comment