அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் சொத்துகள் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.31 வரை நீட்டிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் சொத்துகள் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சி.சமயமூர்த்தி, அனைத்து துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் அசையும், அசையா சொத்துகள், கடன்கள் மற்றும் பிற பொறுப்புகள் குறித்த விவரங்களை ஆண்டுதோறும் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி அரசு ஊழியர்கள் 2025, டிச.31-ம் தேதியுடன் முடிந்த ஆண்டுக்கான தங்களின் சொத்துகள், கடன் விவரங்களை ஐஎஃப்ஆர்எம்எஸ் இணைய தளம் வாயிலாக அக்.31-க்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
ஊழியர்கள் கோரிக்கை:
அதன்பின் வரும் ஒவ்வொரு ஆண்டுக்கான விவரங்களையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சொத்து விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர்களின் அமைப்புகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தன.
அதையேற்று தற்போது கால அவகாசம் டிச.31 வரை 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சொத்து, பொறுப்பு விவரங் களை தவறாமல் சமர்ப்பிக்க உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment