வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் சுவையான மணத்தக்காளி கீரை கடையல் செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, October 31, 2026

வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் சுவையான மணத்தக்காளி கீரை கடையல் செய்வது எப்படி?

 வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணை குணப்படுத்தும் சுவையான மணத்தக்காளி கீரை கடையல் செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:


பருப்பை வேகவைக்க:


- 1/4 கப் துவரம் பருப்பு


- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்


- 1/2 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு


- 3 பச்சை மிளகாய்


- 10 சின்ன வெங்காயம்


- 3 பல் பூண்டு

- 

- 1 தக்காளி


- 1/4 டீஸ்பூன் நல்லெண்ணெய்


- 1 1/4 கப் தண்ணீர்


கடையல் செய்ய:


- 1 கட்டு மணத்தக்காளி கீரை


- 1/3 கப் தண்ணீர்


- தேவையான அளவு உப்பு


தாளிக்க:


- 1/2 டேபிள்ஸ்பூன் நெய்


- 1 டீஸ்பூன் சீரகம்


- 1/2 டீஸ்பூன் கடுகு


- 2 வர மிளகாய்


- 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு


செய்முறை


- முதலில் துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்றாக கழுவிக் கொள்ளவும்.  


- அவற்றைச் சூடான நீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். பிறகு குக்கருக்கு மாற்றவும்.


- அதில் தண்ணீர், மஞ்சள் தூள், சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும்.


 

அதனுடன் தக்காளி மற்றும் நல்லெண்ணெய் சேர்க்கவும்.


 குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேகவைத்து, பின் 3 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும்.


 தானாகவே ஆவி அடங்கும் வரை காத்திருக்கவும். 


 பருப்பை நன்றாகக் கலந்து மசித்துக்கொள்ளவும். 



- மணத்தக்காளி கீரை, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.


 நன்றாக மசித்து மீண்டும் கொதிக்கவிடவும்.


 பின்னர் அடுப்பை அணைக்கவும்.


 வேக வைத்த பருப்பை இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். 


 ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் நெய் ஊற்றி சூடாக்கவும்.


 நெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்துத் தாளிக்கவும். 


 அடுப்பை அணைத்துவிட்டு, தாளிப்பை பருப்புக் கலவையில் சேர்க்கவும்.


 பிறகு மீண்டும் அடுப்பை பற்ற வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். 


 அவ்வளவுதான் சுவையான மணத்தக்காளி கீரை கடையல் ரெடி!

No comments:

Post a Comment