இந்தியன் வங்கியில் 1500 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு மாதம் ₹15,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு
இந்தியன் வங்கி, 2026-27 நிதியாண்டிற்கான அப்ரண்டிஸ் பணி நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்ற, 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் தேர்வு செய்த மாநிலத்தில் ஓராண்டு கால பயிற்சி வழங்கப்படும்.
மொத்தம் 1,500 அப்ரண்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 2026 நவம்பர் 5-ஆம் தேதி தொடங்குகியது.
விண்ணப்பதாரர்கள் 2026 நவம்பர் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் இந்தியன் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தியன் வங்கி பயிற்சிப் பணியாளர் ஆட்சேர்ப்பு 2026-க்குத் தேவையான வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பதிவு ஆகியவை கீழே உள்ள குறிப்புகளில் அடங்கும்.
கல்வி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பட்டமளிப்புத் தேதி: தேர்வு முடிவுகள் 1 ஏப்ரல் 2022 மற்றும் 1 நவம்பர் 2026-க்கு இடையில் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1 நவம்பர் 2026 அன்று 20 முதல் 28 வயது வரை.
கடைசித் தேதி: வயது மற்றும் கல்வித் தகுதி ஆகிய இரண்டிற்கும் 1 நவம்பர் 2026.
வயது தளர்வு: இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
பதிவு: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன் NATS பயிற்சி இணையதளத்தில் பதிவு செய்து, தங்கள் சுயவிவரத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
முதலில் விண்ணப்பதாரர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான indianbank.bank.in-க்குச் செல்ல வேண்டும்.
அங்குள்ள 'Careers' அல்லது 'Recruitment' பகுதியில், இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பையும், விண்ணப்பிப்பதற்கான இணைப்பையும் காணலாம்.
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் பதிவை முடித்து, விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை உள்ளிட வேண்டும்.
மேலும், தேவையான ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளைப் பதிவேற்ற வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, சமர்ப்பிக்கும் முன்பாக அனைத்து விவரங்களையும் கவனமாகச் சரிபார்க்கவும். எதிர்காலத் தேவைக்காக, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் நகல் ஒன்றை அச்சிட்டு வைத்துக்கொள்ளவும்.
இந்த Apprentice பயிற்சிக்கு நகர்ப்புற மற்றும் பெருநகர கிளைகளில் மாதம் ₹15,000, கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புற கிளைகளில் மாதம் ₹12,300 உதவித்தொகையாக வழங்கப்படும்.
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டிய காலம்:
விண்ணப்பதாரர்கள் 01.04.2022 முதல் 01.11.2026 வரையிலான காலத்திற்குள் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இறுதி தேர்வு முடிவுகள் 01.11.2026 அன்று அல்லது அதற்கு முன்பாக வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.
முடிவுகள் வெளியிடப்பட்ட தேதியை உறுதிப்படுத்தும் பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தின் உரிய ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது: 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது: 28 ஆண்டுகள்
பிறந்த தேதி:
02.11.1998 முதல் 01.11.2006 வரை (இரண்டு தேதிகளும் உட்பட).
வயது தளர்வு
SC / ST 5 ஆண்டுகள்
OBC: 3 ஆண்டுகள்
PwBD – General / EWS 10 :ஆண்டுகள்
PwBD – SC / ST: 15 ஆண்டுகள்
PwBD – OBC: 13 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்
SC / ST / Ex-Servicemen / PwBD- ₹175
மற்ற அனைத்து பிரிவினரும் ₹800
தேர்வு செய்யும் முறை
ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Test – Objective Multiple Choice Questions).
உள்ளூர் மொழித் திறன் தேர்வு
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை அல்லது செல்லுபடியாகும் அடையாளச் சான்று
பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
கையொப்பம்.
பட்டப்படிப்புச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல்.
பிறந்த தேதிக்கான சான்று.
சாதிச் சான்றிதழ் (தேவைப்பட்டால்).
PwBD சான்றிதழ் (பொருந்தினால்).
NATS 2.0 Enrolment ID.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் முதலில் NATS 2.0 இணையதளத்தில் பதிவு செய்து, அதன் பிறகு Indian Bank அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
படி 1: NATS 2.0 இணையதளத்தில் பதிவு செய்தல்
முதலில் https://nats.education.gov.in/ என்ற NATS 2.0 அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
Student Register என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் கல்வி விவரங்களை உள்ளிடவும்.
OTP மூலம் உங்கள் விவரங்களைச் சரிபார்க்கவும்.
தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
உங்கள் சுயவிவரத்தை (Profile) முழுமையாகப் பூர்த்தி செய்யவும்.
கிடைக்கும் NATS Enrolment ID-ஐக் குறித்து வைத்துக்கொள்ளவும்.
படி 2: Indian Bank இணையதளத்தில் விண்ணப்பித்தல்
இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ Careers பக்கமான https://indianbank.bank.in/en/career/ என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
Apprentice Recruitment 2026 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
New Registration என்பதைத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யவும்.
Login செய்து தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
NATS Enrolment ID-ஐ உள்ளிடவும்.
புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
உங்கள் பிரிவுக்கான விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 25.11.2026
அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து எதிர்காலப் பயன்பாட்டிற்காகப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://indianbank.bank.in/documents/20117/34414/FINAL%20UPDATED%20ADVERTISEMENT%20FOR%20ENGAGEMENT%20OF%20APPRENTICES%20FOR%20FY%202026-27%20-%2004.11.20262026_11_04_04_14_20.pdf/451450a2-0501-51ba-e37c-db63b9c27425
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://indianbank.bank.in/en/career
NATS 2.0 பதிவு செய்ய
https://nats.education.gov.in/

No comments:
Post a Comment