சுப்ரீம் கோர்ட்டில் 130 அட்டெண்டண்ட் வேலை: ரூ.69,100 வரை சம்பளம் - 10, 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 130 ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
வயது வரம்பு :
25.11.2026 அன்று 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு.
சம்பள விவரம் ;
தேர்வு செய்யப்படும் ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் பணிக்கு மாதம் ரூ.21,700 அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். இதனுடன் அரசு விதிகளின்படி இதர படிகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கணினி வழித் தேர்வில்,
- பொது அறிவுத்திறன் மற்றும் பகுத்தறிவு – 25 கேள்விகள்
- கணிதத் திறன் – 25 கேள்விகள்
- பொது ஆங்கிலம் – 25 கேள்விகள்
- பொது அறிவு – 25 கேள்விகள்
என மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும்.
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.750 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற பிரிவினருக்கு ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்படும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.sci.gov.in/ என்ற முகவரியில் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
25.11.2026
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்:
26.12.2026.
தகுதியானவர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் நே 25.11.2026 வரை உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தொடக்க அடிப்படை ஊதியம்:
மாதம் ரூ. 21,700/-
(7th CPC Pay Matrix Level-3)
(அடிப்படை ஊதியத்துடன் மத்திய அரசு விதிகளின்படி அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), நகர ஈட்டுப்படி (CCA) உள்ளிட்ட அனைத்துப் படிகளும் சேர்க்கப்பட்டுத் தொடக்க மாத மொத்த ஊதியம் வழங்கப்படும்).
கல்வித் தகுதி
குறைந்தபட்ச கல்வித் தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு (SSLC / Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச கல்வித் தகுதி:
அதிகபட்சமாக 12-ஆம் வகுப்பு (Higher Secondary / +2) தேர்ச்சி வரை மட்டுமே இருக்க வேண்டும்.
முக்கியக் குறிப்பு:
கல்லூரிகளில் தற்போது பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியில்லை.
தேர்வு செய்யும் முறைகள்
கணினி வழி எழுத்துத் தேர்வு
பொது அறிவு
நடப்பு நிகழ்வுகள்
பொது ஆங்கிலம்
மற்றும்
அடிப்படைக் கணிதம்/திறனறிவை
உள்ளடக்கிய கொள்குறி வகை ஆன்லைன் தேர்வு
நேர்முகத் தேர்வு
கணினி வழித் தேர்வில் தகுதி பெறும் நபர்களுக்கு ஆளுமை மற்றும் பணித் தகுதியை மதிப்பிடும் நேரடி நேர்காணல் நடத்தப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு & மருத்துவப் பரிசோதனை:
அசல் சான்றிதழ்கள் மற்றும் மருத்துவத் தகுதி உறுதி செய்யப்பட்டு இறுதி பணி நியமன ஆணை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sci.gov.in பக்கத்திற்குச் செல்லவும்.
முகப்புப் பக்கத்தில் உள்ள Recruitment பகுதியைத் தேர்ந்தெடுத்து, “Junior Court Attendant Recruitment 2026” என்ற அறிவிப்பைக் கண்டறியவும்.
அங்கு கொடுக்கப்பட்டுள்ள “Apply Online” நேரடி விண்ணப்ப இணைப்பைக் கிளிக் செய்யவும்.
“New Registration” என்பதைத் தேர்வு செய்து பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுப் பயனர் கணக்கை உருவாக்கவும்.
உருவாக்கப்பட்ட Login விவரங்களைக் கொண்டு உள்நுழைந்து, தனிப்பட்ட தகவல்கள், தொடர்பு முகவரி மற்றும் 10-ஆம் வகுப்பு கல்வி விவரங்களைப் பிழையின்றிப் பூர்த்தி செய்யவும்.
உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்வு மைய நகரங்களைத் (Exam Cities) தேர்வு செய்யவும்.
அறிவுறுத்தப்பட்ட தொழில்நுட்ப அளவில் அண்மைக்கால பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும்.
உங்களது சமூகப் பிரிவுக்குரிய தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் வழியாகச் செலுத்தவும்.
அனைத்து விவரங்களையும் முழுமையாகச் சரிபார்த்து விண்ணப்பத்தை ‘Final Submit’ செய்யவும்.
உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து எதிர்காலத் தேவைக்காகப் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
(பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் கடித நகலை உச்ச நீதிமன்றத்திற்கு அஞ்சல் வழியாக அனுப்பத் தேவையில்லை).
விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள கல்வித் தகுதியை மீறி பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பித்தால், பின்னொரு நாளில் சான்றிதழ் சரிபார்ப்பின் போது உண்மை தெரியவந்தால் விண்ணப்பம் ரத்து செய்யப்படும்.
ஆன்லைன் கணினித் தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் (Negative Marking) இருக்கும் என்பதால் கவனமாக விடையளிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கிய நாள்: 04.11.2026
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.11.2026 (இரவு 11:55 மணி வரை)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/7/9001180259.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://cdn3.digialm.com/EForms/configuredHtml/32912/102788/kPUDLqWekklIXZZ061/Index.html

No comments:
Post a Comment