இந்திய உச்ச நீதிமன்றத்தில் 250 Junior Court Assistant பணியிடங்களுக்கு ₹35,400 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, October 2, 2026

இந்திய உச்ச நீதிமன்றத்தில் 250 Junior Court Assistant பணியிடங்களுக்கு ₹35,400 ஊதியத்தில் வேலைவாய்ப்பு

 இந்திய உச்ச நீதிமன்றத்தில் 250 Junior Court Assistant பணியிடங்களுக்கு ₹35,400 ஊதியத்தில் வேலைவாய்ப்பு


இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant பணிக்கு 250 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


Any Degree படித்தவர்கள், கணினியில் குறைந்தபட்சம் 35 w.p.m. ஆங்கில தட்டச்சு வேகம் கொண்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 


மாதம் ₹35,400 சம்பளம் வழங்கப்படும்.


 தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 07.10.2026 முதல் 28.10.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


கல்வித் தகுதி மற்றும் கணினித் திறன்கள்


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு (Graduation Degree) பெற்றிருக்க வேண்டும்.


மேலும், கணினியை இயக்குவதற்கான அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.


அத்துடன், கணினியில் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு குறைந்தது 35 வார்த்தைகள் (35 WPM) தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு


விண்ணப்பதாரர்கள் 1 செப்டம்பர் 2026 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களாகவும், அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.


SC, ST, OBC  மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.


மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் சார்ந்தவர்களுக்கு (Dependents of Freedom Fighters) கூடுதலாக அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு வழங்கப்படும்.


வயது தளர்வு: 


SC / ST – 5 ஆண்டுகள்


OBC – 3 ஆண்டுகள்


PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்


PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்


PwBD (OBC) – 13 ஆண்டுகள்


விண்ணப்பக் கட்டணம்


பொதுப் பிரிவு மற்றும் இடஒதுக்கீடு இல்லாத (Unreserved) பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ₹1,500 ஆகும்.


SC, ST, OBC (Non-Creamy Layer), முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ₹750 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.


இதனுடன் வங்கி சேவைக் கட்டணங்களும் (Bank Charges) பொருந்தும்.


விண்ணப்பக் கட்டணத்தை UCO வங்கியின் Payment Gateway மூலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்.


செலுத்திய விண்ணப்பக் கட்டணம் எந்தச் சூழ்நிலையிலும் திருப்பித் தரப்படாது (Non-Refundable).


நான்கு கட்ட தேர்வு முறை


தேர்வு செயல்முறை நான்கு கட்டங்களாக நடைபெறும்:


1. கொள்குறி வகைத் தேர்வு (Objective-Type Test)



2. கணினி தட்டச்சுத் தேர்வு (Computer Typing Test)



3. விரிவான எழுத்துத் தேர்வு (Descriptive Written Test)



4. நேர்காணல் (Interview)




1. கொள்குறி வகைத் தேர்வு


இந்தத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பின்வரும் பாடங்களில் கேள்விகள் இடம்பெறும்:


பொதுவான ஆங்கிலம் (General English)


பொதுத் திறனறிவு (General Aptitude)


பொது அறிவு (General Knowledge)


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நீதித்துறை தொடர்பான விதிகள்


உச்ச நீதிமன்ற விதிகள், 2013 (Supreme Court Rules, 2013)


உச்ச நீதிமன்ற அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சேவை விதிகள், 1961


கணினி அறிவு (Computer Knowledge)



தேர்வு நேரம் 90 நிமிடங்கள். தகுதி பெற குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் பெற வேண்டும்.


2. தட்டச்சுத் தேர்வு


விண்ணப்பதாரர்களுக்கு 10 நிமிட ஆங்கில தட்டச்சுத் தேர்வு நடைபெறும்.


குறைந்தபட்சம் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் (35 WPM) என்ற வேகத்தில் தட்டச்சு செய்ய வேண்டும்.


இந்தத் தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தகுதி பெற குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் பெற வேண்டும்.


3. விரிவான எழுத்துத் தேர்வு


இந்த 2 மணி நேர ஆங்கிலத் தேர்வில் பின்வரும் பகுதிகள் இடம்பெறும்:


புரிதல் திறன் (Comprehension)


சுருக்கமாக எழுதுதல் (Precis Writing)


கட்டுரை எழுதுதல் (Essay Writing)



இந்தத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தகுதி பெற குறைந்தபட்சம் 50 மதிப்பெண்கள் பெற வேண்டும்.


4. நேர்காணல்


இறுதிக் கட்டமான நேர்காணல் 25 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.


தகுதி பெற குறைந்தபட்சம் 13 மதிப்பெண்கள் பெற வேண்டும்.


விண்ணப்ப தேதிகள்


ஆன்லைன் விண்ணப்பப் பதிவு 7 அக்டோபர் 2026 அன்று தொடங்கும்.


தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 28 அக்டோபர் 2026 இரவு 11:55 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்களை உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.sci.gov.in) மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.


தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


சம்பளம் 


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Matrix Level-6 அடிப்படையில் ஆரம்ப அடிப்படை சம்பளமாக ₹35,400 வழங்கப்படும்.


 இதனுடன் பிற அரசு சலுகைகள் மற்றும் படிகளும் (Allowances) வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


முதலில் Supreme Court of India அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.


Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.


Junior Court Assistant Recruitment 2026 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.


Apply Online என்பதை கிளிக் செய்யவும்.


உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், Email ID உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்து Registration செய்யவும்.


கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரியாக உள்ளிடவும்.


Photo, Signature மற்றும் தேவையான Certificates-ஐ அறிவுறுத்தப்பட்ட அளவு/வடிவத்தில் Upload செய்யவும்.


தேர்வு மையங்களை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யவும்.


ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.


அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து Submit செய்யவும்.


இறுதியாக Application Form / Registration Number-ஐ Save அல்லது Print செய்து வைத்துக்கொள்ளவும்.


 விண்ணப்பத்தின் Printout-ஐ Supreme Court-க்கு அனுப்ப வேண்டியதில்லை.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2026/09/2026093036.pdf


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://www.sci.gov.in/recruitments/

No comments:

Post a Comment