செல்போனில் எத்தனை சதவீதம் சார்ஜ் ஏற்ற வேண்டும்?100 சதவீதத்தை நெருங்கும்போது செல்போன் ஏன் மெதுவாக சார்ஜ் ஆகிறது? - Minnalseithi

Latest

Search This Blog

Friday, October 16, 2026

செல்போனில் எத்தனை சதவீதம் சார்ஜ் ஏற்ற வேண்டும்?100 சதவீதத்தை நெருங்கும்போது செல்போன் ஏன் மெதுவாக சார்ஜ் ஆகிறது?

 செல்போனில் எத்தனை சதவீதம் சார்ஜ் ஏற்ற வேண்டும்?100 சதவீதத்தை நெருங்கும்போது செல்போன் ஏன் மெதுவாக சார்ஜ் ஆகிறது?


பெரும்பாலான நபர்கள் போனை எப்பொழுதும் 100 சதவீத சார்ஜிங்கில் தான் வைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.


அது மட்டுமின்றி சார்ஜ் போட்ட போனை 100 சதவீதம் சார்ஜ் ஏறிய பின்பும் நீண்ட நேரம் அப்படியே வைத்து விடுகின்றனர்.


இவை பேட்டரியில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது அநேக பேருக்கு தெரியவில்லை.


ஓவர் சார்ஜிங் செய்வது பேட்டரியில் உடனடியான தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனால் பேட்டரியின் ஆயுளை குறைத்துவிடுமாம்.  


தற்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பேட்டரிகளை தனியாக வெளியே எடுக்கவோ மாற்றவோ முடியாது.


எனவே, செல்போனின் உயிர் போன்ற பேட்டரியை பக்குவமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.


அடிக்கடி 100 சதவீதம் சார்ஜ் போடுவதால்தான் செல்போன் விரைவில் செயலிழப்பதால் 80 சதவீதம் மட்டும் சார்ஜ் ஏற்றினால் போதுமானது.


எப்போதாவது ஒருமுறை வேண்டுமானால் 100 சதவீதம் சார்ஜ் செய்து கொள்ளலாம். எனவே, ஒரு செல்போனை வழக்கமாக 80 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் போட்டு, அதனைப் பயன்படுத்துவது நல்லது.


செல்போனில் பேட்டரியை 80 சதவீதம் வரையே சார்ஜ் செய்து பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் 100 சதவீதம் வரை சார்ஜ் செய்து பயன்படுத்தவே சிலர் விரும்புகிறார்கள்.


 80 சதவீதம் சார்ஜ் ஆன பிறகு 100 சதவீதத்தை நெருங்கும்போது சார்ஜ் ஆகும் வேகம் குறையத் தொடங்கும்.


 அதனை நீங்கள் கவனித்திருக்கலாம். எதற்காக சார்ஜ் வேகம் குறைகிறது தெரியுமா? பேட்டரியை பாதுகாக்கத்தான்.


பெரும்பாலான நவீன செல்போன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள், குறைந்த சார்ஜ் நிலையில் வேகமாக சார்ஜ் ஆகும். பேட்டரி அதன் அதிகபட்ச மின்னழுத்தத்தை நெருங்கும்போது, சார்ஜ் செய்யப்படும் மின்சாரத்தின் அளவு படிப்படியாகக் குறைக்கப்படும்.


உதாரணமாக ஆப்பிள் நிறுவனம் தனது லித்தியம்-அயன் பேட்டரிகள் முதலில் சுமார் 80 சதவீதம் வரை வேகமாக சார்ஜ் ஆகும் என்றும், அதன் பிறகு பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க மெதுவான சார்ஜ் முறைக்கு மாறும் என்றும் தெரிவித்துள்ளது. சில செல்போன் சாதனங்களில் சார்ஜை 80 சதவீதத்தில் நிறுத்தும் வசதியும் உள்ளது. அதுபோல் குறிப்பிட்ட செல்போன்களில் சார்ஜை 80, 85, 90 அல்லது 95 சதவீதத்தில் நிறுத்தும் வரம்பு களை தேர்வு செய்யவும் முடியும்.


பேட்டரி அதிகமாக சூடானால் அதன் செயல் திறன் பாதிக்கப்படும். குறிப்பாக அதிக வெப்பநிலை பேட்டரியின் ஆயுளை குறைக்கும்.


அதனை தடுத்து ஆயுளை நீட்டிப்பதற்காகவே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment