சுவையான பொன்னாங்கண்ணி கீரைக்குழம்பு செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 5, 2026

சுவையான பொன்னாங்கண்ணி கீரைக்குழம்பு செய்வது எப்படி?

 சுவையான பொன்னாங்கண்ணி கீரைக்குழம்பு  செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:


பொன்னாங்கண்ணி கீரை- 1 கட்டு


துவரம் பருப்பு அல்லதுபாசிப்பருப்பு - 1/4 ஆழாக்கு


சிறிய வெங்காயம்- 6


தக்காளி- 2


சாம்பார் பொடி- 1 ஸ்பூன்


உப்பு –½ ஸ்பூன்


கடுகு- ½ டீஸ்பூன்


சீரகம்-½ டீஸ்பூன்


எண்ணெய் - 4 ஸ்பூன்


செய்முறை:


பொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவிக்கொள்ளவும்.


பருப்பை வேக வைத்து எடுக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும்.


வெந்த பருப்பில் கீரை, தக்காளி, சாம்பார் பொடி, உப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு, பொரிந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும்.


வெங்காயம் வதங்கியதும், வெந்த கீரையை அதில் ஊற்றி, கொதித்ததும் இறக்கவும்.


சத்தும் சுவையும் மிக்க பொன்னாங்கண்ணி கீரைக்குழம்பு தயார்.

No comments:

Post a Comment