இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 291 அதிகாரி பணியிடங்களுக்கு Rs.48480 முதல் Rs.1,05,280 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Saturday, September 5, 2026

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 291 அதிகாரி பணியிடங்களுக்கு Rs.48480 முதல் Rs.1,05,280 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு..!

 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 291 அதிகாரி பணியிடங்களுக்கு Rs.48480 முதல் Rs.1,05,280 வரை ஊதியத்தில்  வேலைவாய்ப்பு..!


பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 2026-27-ம் ஆண்டுக்கான பொது மற்றும் சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மொத்தம் 291 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 29-ந் தேதி தொடங்கியது.


இதில் மேனேஜர் (கிளை மேலாண்மை) 100, மேனேஜர் (ஐ.டி.) 65, மேனேஜர் (இன்பர்மேஷன் செக்யூரிட்டி) 5, மேனேஜர் (இன்பர்மேஷன் செக்யூரிட்டி ஆடிட்) 5 என பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. மேலும் சீனியர் மேனேஜர் பிரிவில் ஐ.டி., தகவல் பாதுகாப்பு, ஆடிட், டேட்டாபேஸ், நெட்வொர்க், சைபர் செக்யூரிட்டி, கிரெடிட், ரிஸ்க் உள்ளிட்ட பணிகளும், அசிஸ்டென்ட் மேனேஜர் (செக்யூரிட்டி) பணியிடங்களும் உள்ளன.


கல்வித்தகுதி பணிக்கு ஏற்ப மாறுபடும். தொடர்புடைய பிரிவில் பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., சி.ஏ. உள்ளிட்ட கல்வித்தகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. சில பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவமும் அவசியம். வயது வரம்பும் பணிக்கு ஏற்ப மாறுபடுகிறது. வயது மற்றும் அனுபவம் 1.8.2026 நிலவரப்படி கணக்கிடப்படும்.


தகுதியானவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இறுதித் தேர்வில் ஆன்லைன் தேர்வுக்கு 80 சதவீதமும், நேர்முகத்தேர்வுக்கு 20 சதவீதமும் மதிப்பெண் அடிப்படையாகக் கொள்ளப்படும். பணியிடங்களுக்கு ஏற்ப சம்பள விகிதம் மாறுபடும். அதிகாரி பணிகளுக்கு மாத சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.1,05,280 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவினர், ஓ.பி.சி., இ.டபிள்யூ.எஸ். பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1,000-ம், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.175-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு, பணி அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்களை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்து விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2026


விண்ணப்பிக்கும் முறை:


IOB அதிகாரப்பூர்வ Careers பக்கத்திற்குச் செல்லவும்.


Recruitment of Generalist / Specialist Officers அறிவிப்பைத் திறக்கவும்.


Apply Online என்பதை கிளிக் செய்யவும்.


தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் அனுபவ விவரங்களைச் சரியாக உள்ளிடவும்.


தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.


விண்ணப்பத்தை Submit செய்து, Application Form / Fee Receipt-ஐ பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://www.iob.bank.in/documents/d/guest/Revised-FINAL-Web-Ad-Recruitment-Gen-Spl-2026-27


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://ibpsreg.ibps.in/iobgoaug26/


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://www.iob.bank.in/en/careers

No comments:

Post a Comment