ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பதிவறை எழுத்தர்,அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு ரூ 71,900 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, September 29, 2026

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பதிவறை எழுத்தர்,அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு ரூ 71,900 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு

 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பதிவறை எழுத்தர்,அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு ரூ 71,900 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு


தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆனது தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பல்வேறு பதிவறை எழுத்தர்,அலுவலக உதவியாளர், ஓட்டுநர், பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.


இப்பணிக்கு 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.


கடைசி தேதி


மாவட்டத்தைப் பொறுத்து மாறுபடும்.



பதவி மற்றும் கல்வித் தகுதி


பதிவறை எழுத்தர்


 10ம் வகுப்பு தேர்ச்சி


அலுவலக உதவியாளர் 


8ம் வகுப்பு தேர்ச்சி, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


ஓட்டுநர்


8ம் வகுப்பு தேர்ச்சி, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தது 5 ஆண்டுகள் மோட்டார் வாகனங்களை ஓட்டிய நடைமுறை அனுபவம் இருக்க வேண்டும்.


வயது வரம்பு 


பதிவறை எழுத்தர் / அலுவலக உதவியாளர்


ஆதி திராவிடர் (SC): 18 – 37 வயது


மாற்றுத்திறனாளிகள் :18 – 47 வயது


முன்னாள் இராணுவ வீரர்: 18 – 55 வயது


ஓட்டுநர்


ஆதி திராவிடர் (SC) :18 – 42 வயது


மாற்றுத்திறனாளிகள்: 18 – 52 வயது


முன்னாள் இராணுவ வீரர் :18 – 55 வயது


சம்பள விவரங்கள்


பதிவறை எழுத்தர் :


₹15,900 – ₹58,500 / மாதம்


அலுவலக உதவியாளர்


  ₹15,900 – ₹58,500 / மாதம்


ஓட்டுநர் 


₹19,500 – ₹71,900 / மாதம்


பணிக்கு தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு பணி வழங்கப்படும் .


அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. தபால் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.


முக்கிய தேதிகள்


மதுரை 10.10.2026


திருச்சி 09.10.2026


விண்ணப்பிக்கும் முறை 


முதலில், விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க உள்ள சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை  பார்வையிட்டு, அங்கு வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை சரிபார்த்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களின் நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.


நிர்ணயிக்கப்பட்ட வயது மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு வழங்கப்படும்.


முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.


நேர்காணலுக்குத் தகுதி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம், தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் Call Letter மூலம் தனியாகத் தெரிவிக்கப்படும்.


மாவட்டம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்


மதுரை


https://madurai.nic.in/notice_category/recruitment/


திருச்சி


https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/

No comments:

Post a Comment