தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு ரூ 22,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Monday, September 28, 2026

தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு ரூ 22,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கத்தில் தொழில்நுட்ப உதவியாளர்  பணியிடத்திற்கு  ரூ 22,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், கடலூர் மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப உதவியாளர்  பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இப்பணிக்கு மாதம் ₹22,000 சம்பளமாக வழங்கப்படும்.


 இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.


 விண்ணப்பங்கள் 25.09.2026 முதல் 30.09.2026 வரை வரவேற்கப்படுகின்றன.


பதவி:


 தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)


சம்பளம்: மாதம் Rs.22,000/-


காலியிடங்கள்: 01


பணிக்காலம்: 19 மாதங்கள்


கல்வி தகுதி:


விண்ணப்பதாரர் பின்வரும் துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்:


உயிரியல் அறிவியல்


சுற்றுச்சூழல் அறிவியல்


சூழலியல்


வனவியல்


வனவிலங்கு அறிவியல்


பொதுக் கொள்கை

தொடர்புடைய / இணையான துறைகள்


மேலும், M.A. English கல்வித் தகுதி பெற்றவர்களும் தகுதிக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.


அனுபவம் மற்றும் திறன்கள்:


குறைந்தபட்சம் 1 ஆண்டு தொடர்புடைய பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.


குறிப்பாக அரசு துறை / அரசு அலுவலகத்தில் 1 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.


Data Entry / Data Management அனுபவம்.


அரசு அலுவலக கோப்பு மற்றும் பதிவேடு பராமரிப்பு, ஆவணப்படுத்துதல் அனுபவம்.


MS Word, MS Excel, MS PowerPoint ஆகியவற்றில் நல்ல திறன்.


அரசு அறிக்கைகள், கடிதங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் PowerPoint Presentations தயாரிக்கும் திறன்.

தரவு தொகுத்தல் மற்றும் அலுவலக ஆவணப் பணிகளில் அனுபவம்.


நல்ல தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புத் திறன்.


வயது வரம்பு:


 விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் போது 40 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது.


குடியிருப்பு தகுதி:


விண்ணப்பதாரர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக /குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது


தேர்வு செய்யும் முறை:


விண்ணப்பங்களின் தகுதி பரிசீலனை

நேர்முகத் தேர்வு

தட்டச்சுத் தேர்வு

தேவைப்பட்டால் 2-3 பேர் கொண்ட காத்திருப்புப் பட்டியல் தயாரிப்பு


முக்கிய தேதிகள்:


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.09.2026


விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது Updated Resume / CV, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.


Email:


 cmgfp.cud@gmail.com



Email Subject:


 Application for Technical Assistant – District Climate Change Mission, Cuddalore



மேலும், நேரடியாகவும் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்,


மாவட்ட ஆட்சியரகம்,


 கடலூர் – 607001



மாவட்ட வன அலுவலகம்,


 கடலூர்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2026/09/17903393697925.pdf


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://cuddalore.nic.in/notice_category/recruitment/

No comments:

Post a Comment