Bank of Baroda வங்கியில் 2482 பணியிடங்களுக்கு ரூ 48,480 முதல் ரூ 85,920 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, August 20, 2026

Bank of Baroda வங்கியில் 2482 பணியிடங்களுக்கு ரூ 48,480 முதல் ரூ 85,920 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 Bank of Baroda வங்கியில் 2482 பணியிடங்களுக்கு ரூ 48,480 முதல் ரூ 85,920 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் (Bank of Baroda) உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 2482 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் 132 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.09.2026 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


LOCAL BANK OFFICERS


காலியிடங்களின் எண்ணிக்கை: 2482


கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயதுத் தகுதி: 01.08.2026 அன்று 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வரம்பில் தளர்வு உண்டு.


சம்பளம்: ரூ. 48,480 – 85,920


தேர்வு செய்யப்படும் முறை: 


இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் வட்டார மொழித் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. இறுதி பணி நியமனத்திற்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

கணினி வழித் தேர்வில் திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது/ வங்கி சார்ந்த 120 கேள்விகள் 120 மதிப்பெண்களுக்கு இடம்பெறும். தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.


விண்ணப்பிக்கும் முறை: 


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க


 http://www.bankofbaroda.co.in/


 என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850. எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 175


விண்ணப்பிக்க கடைசி தேதி:


 07.09.2026


விண்ணப்பிக்கும் முறை:


முதலில் Bank of Baroda-வின் அதிகாரப்பூர்வ Recruitment பக்கத்திற்கு செல்லவும்.


“Recruitment of Local Bank Officers on regular basis – 2026/16” என்பதை தேர்வு செய்யவும்.


“Apply Now” என்பதை கிளிக் செய்யவும். 


இது IBPS online application portal-க்கு அழைத்துச் செல்லும்.


New Registration செய்து, பெயர், மொபைல் எண், Email போன்ற விவரங்களை பதிவு செய்யவும்.


Login செய்து Local Bank Officer பதவியைத் தேர்வு செய்யவும்.


தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் தேர்வு மைய விவரங்களை நிரப்பவும்.


தேவையான Photo, Signature மற்றும் பிற ஆவணங்களை upload செய்யவும்.


விண்ணப்பக் கட்டணத்தை online-ல் செலுத்தவும்.


இறுதியாக Submit செய்து, Application Form மற்றும் Fee Receipt-ஐ download செய்து வைத்துக் கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு பார்க்க 


https://bankofbaroda.bank.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2026/26-08/Advertisement-18-04.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://ibpsreg.ibps.in/bobjul26/

No comments:

Post a Comment