பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ரூ.79,000 வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் ஹவில்தார் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 4788/002/REC/HR & A/CHN/2026
பணி: Havildar(Security)
காலியிடங்கள்: 4
சம்பளம்: மாதம் ரூ.20,500 முதல் 79,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்திய ராணுவத்தில் குறைந்தது 15 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.6.2026 தேதியின்படி 43-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எழுத்து, நேர்முகத் தேர்வுக்கு வரும்போது தேவையான அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.bel-india.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவுத் தபாலில் விண்ணப்பிக்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
AGM (HR & Administration),
Bharat Electronics 4 Limited,
BEL - Army School Road,
Nandambakkam,
Chennai - 600 089.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்:
8.7.2026
கூடுதல் விவரங்களுக்கு
https://bel-india.in/wp-content/uploads/2026/06/17062026-Havildar-Security-Web-Ad-English.pdf

No comments:
Post a Comment