ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வு கடினமாக இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ள விளக்கம்
ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வு கடினமாக இருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் சில விளக்கங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது.
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான நாள்:13.02.2026-இன்படி, பள்ளிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I 04.07.2026 அன்றும், தாள்-II 05.07.2026 அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள்-I இல் 222 மையங்களில் 59,535 ஆசிரியர்களும், தாள்-II இல் 613 மையங்களில் 1,60,929 ஆசிரியர்களும் தேர்வை எழுதினர்.
இத்தகுதித்தேர்வில் தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டுள்ளதாக இத்தேர்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர் .
இதற்கு விளக்கமளித்த ஆசிரியர் தேர்வு வாரியம், NCTE வழிகாட்டுதலின்படி, அரசாணையில் வழங்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே வினாக்கள் இடம் பெற்றன என்று விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, " 13.02.2026 நாளிட்ட அறிவிக்கை எண்.01/2026-இன் படி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) தாள்-I மற்றும் தாள்-II-க்கான பாடத்திட்டங்கள் அனைத்தும், NCTE வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணை (நிலை) எண்.181-இன் படியும், SCERT வழங்கிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-I க்கான வினாக்கள் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் அதன் தரம் பத்தாம் வகுப்பு வரையிலும் , தாள்-II க்கான வினாக்கள் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் அதன் தரம் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலும் கேட்கப்படும் என அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அறிவிக்கை நாள்:13.02.2026-இன்படி 6.01/2026 நடைபெற்ற தகுதித்தேர்வு தாள்-I மற்றும் தாள்-II சார்ந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்களில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் அனைத்தும் NCTE வழிகாட்டுதல்களின்படியும் மற்றும் உரிய அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment