வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் எந்த திசையில் பீரோவை வைத்தால் செல்வம் அதிகரிக்கும்? - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, May 13, 2026

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் எந்த திசையில் பீரோவை வைத்தால் செல்வம் அதிகரிக்கும்?

 வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் எந்த திசையில் பீரோவை வைத்தால் செல்வம் அதிகரிக்கும்?


வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் எந்த திசையில் பீரோவை வைத்தால், லட்சுமி தேவியின் அருள் உங்களுக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.


அனைவரது வீட்டிலும் இருக்கும் பொருட்களில் பீரோவும் ஒன்று. அதில் பணம், தங்கம் மற்றும் துணிகளை சேமித்து வைக்கிறோம். ஆனால், வீட்டில் பீரோவை எப்படி வைக்க வேண்டும் என்பது பலருக்கு தெரியாது. லட்சுமி தேவியின் அருளைப் பெற எந்த திசையில் பீரோவை வைக்க வேண்டும்? பெரும்பாலான மக்கள் பீரோவை எந்த திசையில் வாட்டமாக இருக்கிறோ, அங்கு வைக்கிறார்கள்


மிகவும் மதிப்புமிக்க ஆவணங்கள், நகைகள் மற்றும் பணத்தை பீரோவில் வைக்கிறோம். லட்சுமி தேவின் அருளாசியைப் பெற, பீரோவை நம் வீட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்? எந்த திசையில் வைக்கக் கூடாது? தென்மேற்கு மூலையில் தான் பீரோவை வைக்க வேண்டும். தெற்கு திசைக்கும் மேற்கு திசைக்கும் இடையே உள்ள இடம் தென்மேற்கு மூலை எனப்படும். இந்த மூலையில் மட்டுமே நாம் பீரோவை வைக்க வேண்டும்.


பீரோ கதவை திறந்தால், அது வடக்கு நோக்கி இருக்க வேண்டும். பீரோவின் கதவுகளைத் திறக்கும்போது, நல்ல வாசனை இருக்க வேண்டும். துணி நாற்றமோ, துர்நாற்றமோ வரக்கூடாது. அத்தகைய நாற்றம் வந்தால் லட்சுமி தேவி நம் வீட்டில் வாசம் செய்வதில்லை. மேலும், மஞ்சள், குங்குமத்துடன் கடிகார ஸ்வஸ்திகாவை பீரோ மீது வைக்க வேண்டும். அத்துடன் பீரோ மீது யானைகளுடன் லட்சுமி தேவி இருக்கும் படத்தை வைக்க வேண்டும். யானையின் துதிக்கைகள் உயர்ந்திருந்தால் மிகவும் நல்லது.


எனவே, சரியான திசையில் பீரோவை வைப்பதன் மூலம் லட்சுமி தேவியின் அருளைப் பெறலாம் என்றும், பொருளாதார பிரச்சனைகள் வராது என்றும் ஜோதிட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment