சுவையான ஜவ்வரிசி - கேரட் அல்வா செய்வது எப்படி? - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, May 13, 2026

சுவையான ஜவ்வரிசி - கேரட் அல்வா செய்வது எப்படி?

 சுவையான ஜவ்வரிசி - கேரட் அல்வா செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:-


ஜவ்வரிசி - ½ கப் (சிறியது)


கேரட் - 200 கிராம்


நெய் - 3 டேபிள் ஸ்பூன்


முந்திரி பருப்பு - 10


சர்க்கரை - ½ கப்


ஏலக்காய் பொடி - ¼ டீஸ்பூன்


செய்முறை


முதலில் ஜவ்வரிசியை வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 


அதற்கு, அடுப்பை 'ஆன்' செய்து, ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.


 அதில் ஜவ்வரிசியை சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்து கண்ணாடி பதத்திற்கு ஜவ்வரிசி வந்தவுடன், தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.


அடுத்து, ஒரு வாய் அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். 


2 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி, நெய் சூடாகியதும், அத்துடன் சிறிதாக உடைத்து வைத்த முந்திரி பருப்பை சேர்த்து கிளறவும்.


 முந்திரி பருப்பு சற்று பொன்னிறமாக வந்தவுடன் துருவிய கேரட்டை சேர்த்து வதக்கவும்.


கேரட் நன்கு வதங்கி, பச்சை வாசனை போனவுடன் சர்க்கரையை சேர்க்கவும். அத்துடன் வேகவைத்த ஜவ்வரிசியையும் சேர்த்து கிளறவும்.


 சர்க்கரை கரைந்தவுடன் அல்வா பதத்திற்கு வரும். 


அப்போது, மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி, ஏலக்காய் பொடியையும் தூவி கிளறவும்.


 தித்திப்பான ஜவ்வரிசி - கேரட் அல்வா ரெடி.

No comments:

Post a Comment