தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, May 14, 2026

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

 தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) பிரமாண்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிறப்பு அதிகாரி, கிளைத் தலைவர், மேனேஜர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பட்டப்படிப்பு, பி.இ, பிடெக், முதுகலை பட்டம் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.


தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் துணைத் தலைவர் (செக்ரடேரியல் பிரிவு), குளோபல் NRI சென்டர் ஹெட் (GNC) - துணைத் தலைவர், துணை தலைமை நிதி அதிகாரி (துணைத் தலைவர்), சட்ட அதிகாரி - மேலாளர் நிலை, கிளைத் தலைவர் (மேலாளர் / மூத்த மேலாளர் / உதவி துணைத் தலைவர்) போன்ற பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சிறப்பு IT அதிகாரிகளுக்கான பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.


துணைத் தலைவர் - செக்ரடேரியல் பிரிவைப் பொறுத்தவரை, இந்தியன் கம்பெனி செக்ரட்டரிகள் நிறுவனத்தின் (ICSI) உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், வங்கி அல்லது பட்டியலிடப்பட்ட நிறுவனத்தில் கம்பெனி செக்ரட்டரியாக குறைந்தது நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


குளோபல் NRI சென்டர் ஹெட் (GNC) - துணைத் தலைவர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வழக்கமான பாடத்திட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வங்கித் துறையில் NRI வணிகத்தைக் கையாண்ட பத்து வருட பணி அனுபவம் இதில் ஐந்து வருட மேலாண்மை அல்லது மேற்பார்வை அனுபவம் கட்டாயம்.


துணை தலைமை நிதி அதிகாரி (துணைத் தலைவர்) பதவிக்கு தணிக்கைத் துறையில் பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) தகுதி பெற்றிருக்க வேண்டும். நிதிச் செயல்பாடுகள் நிர்வாகத்தில், குறிப்பாக வங்கிகள், பெரிய நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் அல்லது நிதி சேவை நிறுவனங்களில் கணக்கியல் மற்றும் வரிவிதிப்பு விஷயங்களில் பத்து வருட அனுபவம் தேவை.


சட்ட அதிகாரி - மேலாளர் நிலை பணிக்கு, BL/ML அல்லது அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் வழக்கறிஞர் அனுபவம் அல்லது வங்கி/நிதி நிறுவனத்தின் சட்டத் துறையில் அதிகாரியாக குறைந்தது இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


கிளைத் தலைவர் (மேலாளர் / மூத்த மேலாளர் / உதவி துணைத் தலைவர் (AVP)) பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வழக்கமான பாடத்திட்டத்தின் கீழ் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அனுபவத் தேவைகள் குறிப்பிட்ட பதவி நிலைக்கு ஏற்ப மாறுபடும்.


மேலாளர் பதவிக்கு, வங்கித் துறையில் அசிஸ்டென்ட் மேலாளர் அல்லது அதற்கு மேலான நிலையில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். வங்கி நிர்வாகத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.


மூத்த மேலாளர் பதவிக்கு, வங்கித் துறையில் குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். இதில், மேலாளர் மட்டத்தில் குறைந்தது 4 ஆண்டுகள் மேலாண்மைப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இது மூத்த நிர்வாகப் பொறுப்புக்கான முக்கியமான தகுதியாகும்.


சிறப்பு அதிகாரிகள் - IT (தொழில்நுட்ப நிர்வாகி) பணிக்கு, CS/IT அல்லது MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மென்பொருள் மேம்பாடு, டிஜிட்டல் தயாரிப்பு சுற்றுச்சூழல் அமைப்புகள் குறித்த அறிவுடன் வங்கி/ஃபின்டெக் துறையில் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் பணி அனுபவம் கட்டாயம். இதில், மென்பொருள் மேம்பாட்டு குழுக்களுக்கு தலைமை தாங்கிய 5-7 ஆண்டுகள் அனுபவம் அடங்கும்.


வயது வரம்பு:


இந்தப் பணியிடங்களுக்கான வயது வரம்பு 31.03.2026 அன்று நிலவரப்படி கணக்கிடப்படும். ஒவ்வொரு பணிக்கும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்புகள் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.


துணைத் தலைவர் - செக்ரடேரியல் பிரிவு மற்றும் குளோபல் NRI சென்டர் ஹெட் (GNC) - துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 40 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


துணை தலைமை நிதி அதிகாரி (துணைத் தலைவர்) பதவிக்கு குறைந்தபட்சம் 45 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 55 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


சட்ட அதிகாரி - மேலாளர் நிலை பதவிக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கிளைத் தலைவர் (மேலாளர் / மூத்த மேலாளர் / உதவி துணைத் தலைவர் (AVP)) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


சிறப்பு அதிகாரிகள் - IT (தொழில்நுட்ப நிர்வாகி), (IT இன்ஃப்ராஸ்ட்ரக்சர் - லீட் சிஸ்டம்ஸ்/சர்வர்கள்) மற்றும் (மென்பொருள் பொறியாளர் - லீட் API டெவலப்பர்) ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் வயது 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம் கிடையாது


விண்ணப்பதாரர்கள் ஷார்ட் லிஸ்ட் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பின்னர், நேரடி அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணல் நடத்தப்படும். இந்த நேர்காணலின் அடிப்படையில் இறுதித் தேர்வு நடைபெறும். இது விண்ணப்பதாரர்களின் திறன்களை மதிப்பிடும் ஒரு வெளிப்படையான செயல்முறை.


இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் எந்தவிதமான விண்ணப்பக் கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இணையதளத்தில் உள்ள 'Careers' பக்கத்திற்கு (https://tmb.bank.in/careers) சென்று, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் படித்த பிறகு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் கால அவகாசம் தொடங்கிய நாள் 29.04.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 19.05.2026 வரை ஆகும்.


அறிவிப்பை காண


https://apps.tmbdigital.bank.in/tmb_careers/doc/BranchHead2627.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க 


https://apps.tmbdigital.bank.in/tmb_careers/

No comments:

Post a Comment