மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் ரூ 47,330 ஊதியத்தில் 1055 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, April 21, 2026

மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் ரூ 47,330 ஊதியத்தில் 1055 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு

 மத்திய அரசு நிலக்கரி நிறுவனத்தில் ரூ 47,330 ஊதியத்தில் 1055 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு


மத்திய அரசுக்கு சொந்தமான நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1,055 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. டிப்ளமோ, இன் ஜினியரிங் முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.47,330 வழங்கப்படும்.


மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனம் சவுதன் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்டுஸ் லிமிமெட். ஒடிசா மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள இந்த நிறுவனத்தில் நிலக்கரிகள் வெட்டி எடுக்கப்படுகின்றன. மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில், காலியாக உள்ள 1,055 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.


பணியிடங்கள் விவரம்:


* சுரங்க சர்தார் (Mining Sirdar ) - 577


* துணை நிலை அளவையர் - 43


* உதவி ஃபோர்மேன் (மின்சாரம்) - 435


கல்வித் தகுதி:


* மைனிங் சர்தார் பணிக்கு டிப்ளமோ இன் மைனிங் அல்லது மைனிங் என்ஜினியரிங் முடித்து இருக்க வேண்டும். நிலக்கரி சுரங்க ஒழுங்குமுறை விதிகள் 2017 கீழ் சுரங்க பணிகளில் பணியாற்றுவதற்கான உரிய சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.


* மைனிங் சர்வேயர் பணிக்கு மைனிங் சர்வேயின் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி படித்து இருக்க வேண்டும்.


* ஃபோர்மேன்(எலக்ட்ரிக்கல்) பணிக்கு எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் படிப்பு முடித்து இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் படித்து உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.


வயது வரம்பு:


18-வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி, எஸ்சிடி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.


சம்பளம் எவ்வளவு:


தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.47,330.25/- சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை கணினி வழியிலான தேர்வு, நேர்முத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,180 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்; 15.04.2026 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்; 14.05.2026 ஆகும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://secl-cil.in/writereaddata/94ae09c362c0260b97a92ee253c0f8c66768e9f79c26b279fe9b40481539076a.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/97844/Index.html


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://secl-cil.in/jobs_secl

No comments:

Post a Comment