ஐ.ஆர்.சி.டி.சி மில் 84 பணியிடங்களுக்கு ரூ 30,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, April 21, 2026

ஐ.ஆர்.சி.டி.சி மில் 84 பணியிடங்களுக்கு ரூ 30,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 ஐ.ஆர்.சி.டி.சி மில் 84 பணியிடங்களுக்கு ரூ 30,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் தெற்கு மண்டலத்தில் விருந்தோம்பல் கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 84 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் நேர்காணல் தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.


Hospitality Monitors


காலியிடங்களின் எண்ணிக்கை: 84


கல்வித் தகுதி: 


B.Sc. in Hospitality and Hotel Administration/ Hotel Management and Catering Science/ BBA/ MBA படித்திருக்க வேண்டும். 


மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


வயதுத் தகுதி: 01.04.2026 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.


சம்பளம்: ரூ. 30,000


தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க


 https://irctc.com/assets/images2/Notification6apr2026.pdf 


என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.


 பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேரடியாக நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.


நேர்காணல் நடைபெறும் தேதி:


 25.04.2026, 27.04,2026, 28.04.2026


நேர்காணல் நடைபெறும் இடம்:


 IRCTC Zonal office/ Chennai, 6A, The Rain Tree Place, No.9, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031


மேலும் விவரங்களுக்கு 


https://irctc.com/assets/images2/Notification6apr2026.pdf

No comments:

Post a Comment