வங்கியில் பணிபுரிய ரூ 50 ஆயிரம் ஊதியத்தில் 1,300 பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு..!
நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐடிபிஐயில் 1,300 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஐடிபிஐ. மத்திய அரசின் பொதுத்துறை காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி இந்த வங்கியில் பெருபான்மையான பங்குகளை வைத்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வங்கி கிளைகள் உள்ளன.
பணியிடங்கள் விவரம்:
சுமார் 20 ஆயிரம் வங்கி கிளைகளுடன் இந்த வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் காலியாக உள்ள 1,300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
* ஜூனியர் அஸ்சிஸ்டண்ட் மேனேஜர் (கிரேட் 0 பிராந்தியம்) -1,100
* அசிஸ்டண்ட் மேனேஜர்(கிரேடு ஏ) - 200 என மொத்தம் 1,300 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும். அசிஸ்டண்ட் மேனேஜர் (கிரேடு ஏ) பணிக்கு வங்கிகள் அல்லது நிதி சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இருப்பது அவசியம். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பை பொறுத்தவரை அசிஸ்டண்ட் மேனேஜர் கிரேடு பணிக்கு 21 வயது முதல் 30 வயது வரையும் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனஜர் பணிக்கு (ஜேஏஎம்) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது 25 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
ஆன்லைன் டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு & சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆன்லைன் டெஸ்ட் கணிணி வழியில் நடைபெறும். ஆப்ஜெக்டிவ் முறையில் வினாத்தாள் இடம் பெற்று இருக்கும். 200 வினாத்தாள் இடம் பெற்று இருக்கும்.
அடுத்தகட்ட தேர்வுக்கு பெற உரிய கட் ஆப் பெறுவது அவசியம். தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட் ஆஃப் நிர்ணயிக்கப்படும். நேர்முகத் தேர்வை பொறுத்தவரை பொது அறிவு, வங்கி பற்றிய விவரங்கள் கேட்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பில் உரிய கல்வி சான்று, அனுபவம் சான்று ஆகியவை பெற்று இருக்க வேண்டும்.
சம்பளம்
* ஆண்டுக்கு ரூ.6.14 லட்சம் முதல் 6.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
* உதவி மேலாளர் பணிக்கு மாதம் ரூ.36 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
Assistant Manager - Grade 'A' பதவிக்கு முழு விவரங்களைப் பெற
https://www.idbi.bank.in/pdf/careers/Advertisement-Grade-A-2-year-exp-March072026.pdf
Assistant Manager - Grade 'A' பதவிக்கு விண்ணப்பிக்க
https://ibpsreg.ibps.in/idbiamnov25/
Junior Assistant Manager (JAM) Grade 'O' பதவிக்கு முழு விவரங்களைப் பெற
https://www.idbi.bank.in/pdf/careers/Advertisement-Grade-O-2-year-exp-March072026.pdf
Junior Assistant Manager (JAM) Grade 'O' பதவிக்கு விண்ணப்பிக்க
http://ibpsreg.ibps.in/idbijamfeb26/
விண்ணப்பிக்க கடைசி நாள் :
19.03.2026

No comments:
Post a Comment