பூங்கா மற்றும் விளையாட்டு திடல் துறையில் 20 பணியிடங்களுக்கு மாதம் ரூ.33,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, March 17, 2026

பூங்கா மற்றும் விளையாட்டு திடல் துறையில் 20 பணியிடங்களுக்கு மாதம் ரூ.33,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 பூங்கா மற்றும்  விளையாட்டு திடல் துறையில் 20 பணியிடங்களுக்கு மாதம் ரூ.33,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


சென்னை மாநகராட்சியில்  வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதி, விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


சென்னை மாநகராட்சியில் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் துறையில்  பூங்கா மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பணிக்கு மொத்தம் 20 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


சென்னை மாநகராட்சியில் பூங்கா மேற்பார்வையாளர் பணிக்கு Diploma In Horiculture/ BSC In Horiculture/Forestry/Agriculture/Botany (Plant Science) படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இந்த பணி முற்றிலும் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது.


12 மாதங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது.  இந்த பணிக்கு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தான், பணிக்கு அமர்த்தப்படுவார்கள். சென்னை மாநகராட்சியில் பூங்கா மேற்பார்வையாளர் பணிக்கு மாத சம்பளமாக ரூ.33,000 என வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவரகள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிப்பது எப்படி?


சென்னை மாநகராட்சியில் பூங்கா மேற்பார்வையாளர் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் chennaicorporationgov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர், அந்த விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் தபால் மூலம் உரிய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


Superintending Engineer,


Park and Play field Department,


Greater Chennai Corporation,


 Ripon Buildings,


Chennai-600003.


என்ற முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத் துறை, ரிப்பன் கட்டிடம் சென்னை - 600003 என்ற முகவரிக்கு வந்த தெரிந்து கொள்ளலாம்.  மேலும், அலுவலக நேரங்களில் 044-25303620 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, உங்கள் பணி தொடர்பாக சந்தேகங்களை அறிந்து கொள்ளலாம். சென்னை மாநகராட்சியில் பூங்கா மேற்பார்வையாளர் பணிக்கு மார்ச் 25ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கட்டணமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம்  பெற


https://www.chennaicorporation.gov.in/gcc/pdf/Application_Park%20overseer.pdf

No comments:

Post a Comment