வங்கியில் 275 பணியிடங்களுக்கு ரூ.48,480 முதல் ரூ 1,20,940 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...! - Minnalseithi

Latest

Search This Blog

Thursday, March 12, 2026

வங்கியில் 275 பணியிடங்களுக்கு ரூ.48,480 முதல் ரூ 1,20,940 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...!

 வங்கியில் 275 பணியிடங்களுக்கு ரூ.48,480 முதல் ரூ 1,20,940 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு...!


சென்ட்ரல் வங்கியில் 275 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பி.இ, பி.டெக். பிசிஏ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். சம்பளத்தை பொறுத்தவரை மாதம் ரூ.48 ஆயிரம் முதல் 1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.


சென்ட்ரல் வங்கியானது நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. நாடு முழுக்க பல்வேறு கிளைகளுடன் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இந்த வங்கியில் பணி செய்து வருகிறார்கள்.


சென்ட்ரல் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படும். அந்த வகையில் தற்போது வங்கியில் காலியாக உள்ள 275 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


பணியிடங்கள் விவரம்:


மொத்தம் 275 சிறப்பு அதிகாரி காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. மென்பொருள் உருவாக்குநர்கள் (Java,.Net), மொபைல் உருவாக்குநர் (Android/iOS), டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேஷன், டிஜிட்டல் சேனல் மேலாளர், கிளவுட் மேலாளர், தகவல் பாதுகாப்பு, நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டர், IT அதிகாரி பணியிடங்கள் மற்றும் ரிஸ்க் மேலாளர், வரிவிதிப்பு / CA போன்ற சிறப்புப் பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.


கல்வித் தகுதி:


பி.இ, பிடெக், எம்சிஏ முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.


வயது வரம்பு


* வயது வரம்பை பொறுத்தவரை பதவிகளுக்கு ஏற்ப மாறுபடும். உதவி மேலாளர் (Scale I) பணிக்கு 30 ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கலாம். மேலாளர் (Scale II) மற்றும் மூத்த மேலாளர் (Scale III) 35 ஆண்டுகள், தலைமை மேலாளர் (Scale IV) 45 ஆண்டுகள் வரை விண்ணப்பிக்கலாம்.


* அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். இதன்படி, SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள். மாற்றுத்திறனாளி (PwBD) Gen/EWS பிரிவினருக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.


சம்பளம் எவ்வளவு:


* உதவி மேலாளர் - ரூ.48,480 - 85,920


* மேலாளர் - ரூ.64,820 - 93,960


* மூத்த மேலாளர் - ரூ.85,920 - 1,05,280


* தலைமை மேலாளர் - ரூ.1,02,300 - 1,20,940.


தேர்வு முறை:


தேர்வு முறையை பொறுத்தவரை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை பெண் விண்ணப்பதாரர்கள், SC/ST மற்றும் PWD பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.850 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.


தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://centralbank.bank.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், முழுமையான அறிவிப்பை படித்து தகுதிநிலையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.


விண்ணபிக்க கடைசி தேதி: 


மார்ச் 23, 2026 ஆகும்.



அதிகாரப்பூர்வ தேர்வு அறிவிப்பினை படிக்க: 


https://centralbank.bank.in/sites/default/files/2026-02/Notification_Recruitment_Specialist.pdf

No comments:

Post a Comment