தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் ரூ 50,000 முதல் 62,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..! - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, March 11, 2026

தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் ரூ 50,000 முதல் 62,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!

 தமிழ்நாடு சிறுதொழில் நிறுவனத்தில் ரூ 50,000 முதல் 62,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு..!


தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தில் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 8 மற்றும் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.62 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.


தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் என்பது தமிழக அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் ஆகும். சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவித்து தொழில் வளாகங்கள் அமைத்தல், வேலை வாய்ப்புகள் உருவாக்குதல், தொழில்முனைவோர்களுக்கு ஆதரவு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது.


பணியிடங்கள் விவரம்:


இந்த நிறுவனத்தில் ஓட்டுநர் பணிக்கு 4 இடங்களும், அலுவலக உதவியாளர் பணிக்கு 7 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நிரந்தர பணியிடமாகும். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.


கல்வித் தகுதி


* ஓட்டுநர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், குறைந்தது 5 வருட அனுபவத்துடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம்.


* அலுவலக உதவியாளர் பணிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், சைக்கிள் அல்லது இரு சக்கர வாகனம் ஓட்டும் திறன் இருக்க வேண்டும்.


வயது வரம்பு


வயது வரம்பை பொறுத்தவரை 18 வயது நிரம்பியவர்களாகவும் 34 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். SC/ST பிரிவினருக்கு 18-37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் எவ்வளவு?


* தேர்ந்தெடுக்கப்படும் ஓட்டுநர்களுக்கு நிலை 8ன் கீழ் மாதம் ரூ.19,500 - 62,000 வரை சம்பளம் வழங்கப்படும்.


* அலுவலக உதவியாளர்களுக்கு நிலை 1ன் கீழ் மாதம் ரூ.15,700 - 50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.


தேர்வு முறை:


மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


முழு விவரங்களுக்கு 


https://drive.google.com/file/d/1AlEVSikWdJPCG7GaiIItXwoX8stApAjU/view?usp=drivesdk


விண்ணப்பங்களை 31.03.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன் தகுதி விவரங்களை கவனமாகப் படிக்கவும்.


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (டான்சி),


எண். 28, திரு. வி. க. தொழிற்பேட்டை,


கிண்டி, 


சென்னை - 600 032


 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப நாள்


 01.03.2026 காலை 10.00 மணி ஆகும்.


 விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்


 31.03.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பதாரர்கள் தங்களது மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண்களை, தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மேலும், அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு புதிய தகவல்களை அறிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.


டான்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் 


https://www.tansi.tn.gov.in/

No comments:

Post a Comment