பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 350 பணியிடங்களுக்கு ₹40,000 முதல் ₹1,40,000 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறியாளர் பதவியில் காலியாகவுள்ள 350 காலிப்பணியிடங்களுக்கு நவம்பர் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் பயிற்சி பொறியாளர் (Probationary Engineer) பதவியில் காலியாகவுள்ள 350 பணியிடங்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் 200 மற்றும் மெக்கானிக்கல் பிரிவில் 150 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இப்பணியிடங்கள்
பொதுப்பிரிவு - 143,
பொதுப்பிரிவு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 35,
ஒபிசி - 94,
எஸ்சி - 52,
எஸ்டி - 26
என நிரபப்படுகிறது.
மேலும் இதில் 45 காலிப்பணியிடங்கள் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
இதற்கு கல்வித்தகுதியாக எலெக்ட்ரானிக்ஸ் பிரிவுக்கு எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் பி.இ/ பி.டெக்/ பி.எஸ்சி ஆகிய 4 ஆண்டு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மெக்கானிக்கல் பிரிவு பணியிடங்களுக்கு மெக்கானிக்கல் பொறியியலில் பி.இ/ பி.டெக்/ பி.எஸ்சி ஆகிய 4 ஆண்டு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் தளர்வு
இப்பணியிடங்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதியின்படி, அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம்.
ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் தளர்வு வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 வரை தளர்வு வழங்கப்படுகிறது.
தேர்வு முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இத்தேர்வில் தேர்ச்சி பெற பொதுப்பிரிவு/ ஒபிசி/ பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 35 சதவீதமும், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் 30 சதவீதமும் பெற வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
இப்பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ. 40,000 முதல் அதிகபடியாக ரூ. 1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இது வருடத்தில் ரூ. 13 லட்சமாகும்.
விண்ணப்பிக்கும் முறை
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ள பயிற்சி பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் https://bel-india.in/job-notifications/ என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 1,180 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. ஆர்வமுள்ளவர்கள் நவம்பர் மாதம் 18ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
Computer Based Test
Interview
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
சேலம்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
வேலூர்
விண்ணப்பிக்கும் முறை:
BEL அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
https://bel-india.in/
Careers பகுதியில் Recruitment for Probationary Engineer அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்யவும்.
கல்வித் தகுதி மற்றும் தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் (பொருந்தினால்).
அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://bel-india.in/wp-content/uploads/2026/10/External-Ad-2026-English-1.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://g06.tcsion.com/EForms/configuredHtml/33192/103061/uPVtXzjwivanf3RWlN/Index.html

No comments:
Post a Comment