உச்ச நீதிமன்றத்தில் 65 Senior Personal Assistant பணியிடங்களுக்கு ரூ.47,600 ஊதியத்தில் வேலைவாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Friday, October 23, 2026

உச்ச நீதிமன்றத்தில் 65 Senior Personal Assistant பணியிடங்களுக்கு ரூ.47,600 ஊதியத்தில் வேலைவாய்ப்பு

 உச்ச நீதிமன்றத்தில் 65 Senior Personal Assistant பணியிடங்களுக்கு ரூ.47,600 ஊதியத்தில் வேலைவாய்ப்பு


உச்ச நீதிமன்றத்தில் Senior Personal Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 


மாதம் ₹47,600 சம்பளம் வழங்கப்படும்.


 தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 20.10.2026 முதல் 10.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள், 2026 அக்டோபர் 1-ஆம் தேதி நிலவரப்படி, குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.


 அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


மத்திய அரசின் விதிகளின்படி, பட்டியலினத்தவர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வயது தளர்வு உண்டு.


 தியாகிகளின் வாரிசுகளுக்கு 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு அளிக்கப்படும்.


 உச்ச நீதிமன்றப் பணியாளர்களுக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை.


கல்வி, தொழில்நுட்பத் தகுதி


இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


 ஆங்கிலச் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் எழுதும் வேகம் பெற்றிருக்க வேண்டும். 


கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.


 கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை


இப்பணியிடங்களுக்கு நான்கு கட்ங்களாக தேர்வு நடத்தப்படும்.


1.கொள்குறிவகைத் தேர்வு: 100 மதிப்பெண்களுக்கு 1½ மணி நேரம் தேர்வு நடைபெறும்.


 இதில் பொது ஆங்கிலம் (25 மதிப்பெண்கள்), பொது அறிவு (25 மதிப்பெண்கள்), அரசியலமைப்பின் நீதித்துறை விதிகள் (25 மதிப்பெண்கள்), உச்ச நீதிமன்ற விதிகள் 2013 (15 மதிப்பெண்கள்) மற்றும் கணினி அறிவு (10 மதிப்பெண்) ஆகிய பகுதிகளில் கேள்விகள் இருக்கும். 


தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் (Negative Marking) இல்லை.


2.சுருக்கெழுத்துத் தேர்வு: ஒரு நிமிடத்திற்கு 110 ஆங்கில வார்த்தைகள் சுருக்கெழுத்து முறையில் எழுத வேண்டும். 45 நிமிடங்களில் அதை கணினியில் எழுத வேண்டும் (100 மதிப்பெண்கள்).


3. கணினி தட்டச்சுத் தேர்வு: ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடங்கள் நடைபெறும் (20 மதிப்பெண்கள்).


4. நேர்காணல்: மேற்கொண்ட மூன்று தேர்வுகளில் தகுதி பெறும் நபர்களுக்கு 30 மதிப்பெண்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.


சம்பளம் எவ்வளவு?


இப்பணியிடங்களுக்கு சம்பள அட்டவணை நிலை 8-இன் கீழ் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.47,600 - ரூ.1,51,100 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும். ஆரம்பக்கட்ட அடிப்படைச் சம்பளமாக ரூ.47,600 மற்றும் மத்திய அரசு விதிகளின்படியான இதர படிகள் வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?


இந்த பணியில் ஆர்வமுள்ளவர்கள் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.sci.gov.in என்ற முகவரியில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


 விண்ணப்பக் கட்டணமாக, பொது/பொதுப்பிரிவினருக்கு ரூ. 1,500/-, எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு: ரூ. 750/- (வங்கிச் சேவைக்கான கூடுதல் கட்டணத்துடன் ஆன்லைனில் செலுத்த வேண்டும்)


தேர்வுக்கான அட்மிட் கார்டு மற்றும் அடுத்தகட்ட தேதிகள் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் அவ்வப்போது அறிவிக்கப்படும்.


முக்கிய நாட்கள்


ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 20.10.2026


விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2026 (இரவு 11.55 மணி வரை)


கொள்குறிவகைத் தேர்வு (தற்காலிக நாள்) :07.12.2026


விடைக்குறிப்பு வெளியீடு: 08.12.2026


தேர்வு செய்யும் முறை:


Computer Based Test


Interview


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண 


https://cdnbbsr.s3waas.gov.in/s3ec0490f1f4972d133619a60c30f3559e/uploads/2026/10/2026101325.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://cdn3.digialm.com/EForms/configuredHtml/32912/102864/14v7jBxcoPI08LH2vw/Index.html


அதிகாரப்பூர்வ இணையதளம்


https://www.sci.gov.in/recruitments/

No comments:

Post a Comment