46 பதவிகளில் 6,574 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு
தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்து காத்திருந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 46 பதவிகளில் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி செயலர் பானோத் ம்ருகேந்தர் லால் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டார்.
எப்போது வரை விண்ணப்பிக்கலாம்?
அதன்படி இத்தேர்வுக்கு செவ்வாய்க்கிழமை (அக். 6) முதல் நவ. 5-ஆம் தேதி வரை இணையவழியில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவ.9 முதல் நவ.11 வரையிலான நாள்களில் வாய்ப்பு வழங்கப்படும்.
இதையடுத்து, எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜன.10-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறும்.
கூடுதல் விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த குரூப் 4 தேர்வு மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் உதவியாளர், பில் கலெக்டர், வனக் காவலர் உள்ளிட்ட 46 பதவிகளில் 6,574 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தேர்வுக் கட்டணத்தை யுபிஐ பரிவர்த்தனை மூலமாகவும் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்- 4 தேர்வைப் பொருத்தவரை பெரும்பாலான பதவிகளுக்கு அடிப்படை கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சியாகும்.
ஒரு சில பதவிகளுக்கு மட்டுமே பட்டப் படிப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு அடிப்படை கல்வித் தகுதியுடன் கூடுதலாக தொழில்நுட்பத் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.10.2026 முதல் 05.11.2026 இரவு 11.59 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத் திருத்தக் காலம் 09.11.2026 முதல் 11.11.2026 வரை வழங்கப்பட்டுள்ளது.
Group 4 எழுத்துத் தேர்வு 10.01.2027 காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.
பதவி வாரியான காலியிடங்கள் விபரம்
இந்த TNPSC Group 4 வேலைவாய்ப்பு 2026 அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் 6,574 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அறிவிப்பில் உள்ள காலியிடங்கள் தற்காலிகமானவை என்றும், கலந்தாய்வு தொடங்குவதற்கு முன் மாற்றப்படலாம் என்றும் TNPSC தெரிவித்துள்ளது.
முக்கிய பதவிகள்
பதவி மற்றும் காலியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் (VAO)- 291
இளநிலை உதவியாளர் – பிணையமற்றது- 28
வரித்தண்டலர் -59
இளநிலை உதவியாளர் – பிணையமுற்றது- 2,610
இளநிலை உதவியாளர் – நீதித்துறை -252
இளநிலை உதவியாளர் – நகர்ப்புறம்- 119
வருவாய் உதவியாளர் -96
இளநிலை உதவியாளர் – மாநகராட்சி -70
இளநிலை உதவியாளர் – பிற துறைகள்- 134
வரி வசூலிப்பவர்- 107
இளநிலை உதவியாளர் – சிறு தொழில் வளர்ச்சிக் கழகம்-25
இளநிலை உதவியாளர் – கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள்- 20
வனக்காப்பாளர்- 422
வனக்காவலர் -38
இளநிலை நிர்வாக உதவியாளர் -42
இளநிலை நிர்வாக உதவியாளர் – கணினி இயக்குபவர் -13
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்- 6
தட்டச்சர் -856%*
தட்டச்சர் -377%*
தட்டச்சர் – சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் -15
தட்டச்சர் – வேறு துறைகள் 260
சுருக்கெழுத்துத் தட்டச்சர் Grade III- 209%*
சுருக்கெழுத்துத் தட்டச்சர் Grade III- 145%*
வனக்காப்பாளர் / பிற வனத்துறை பதவிகள் பதவிக்கேற்ப
பதிவறை எழுத்தர்- 19
முகநிலை ஆய்வக உதவியாளர் -1
அலுவலக உதவியாளர்- 23
விற்பனை உதவியாளர் -10$
வனக் காவலர் / வனக் காப்பாளர்- 1
மொத்தம்: 6,574 காலியிடங்கள்
குறிப்பு: அறிவிப்பில் *, #, $, %, @ போன்ற குறியீடுகளுடன் குறிப்பிடப்பட்ட சில காலியிடங்கள் சிறப்பு விதிமுறைகள்/ஒதுக்கீடுகளுடன் தொடர்புடையவை. இறுதி காலியிட எண்ணிக்கை கலந்தாய்வுக்கு முன் மாற்றப்படலாம்.
இந்த விவரங்கள் விண்ணப்பத்தாரர்களின் இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு ஏற்ப மாறுபடலாம்.
இந்த விவரங்கள் விண்ணப்பத்தாரர்களின் இடஒதுக்கீட்டுப் பிரிவுக்கு ஏற்பவும், காலிப்பணியிடங்களின் குறைப்பு அல்லது கூட்டலுக்கும் உள்ளாக்கப்படலாம்.
கல்வித் தகுதி
தேர்வில் அனைத்து பதவிகளுக்கும் ஒரே கல்வித் தகுதி கிடையாது. விண்ணப்பிக்கும் பதவிக்கு ஏற்ப 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு அல்லது குறிப்பிட்ட தொழில்நுட்பத் தகுதி தேவைப்படும்.
அறிவிப்பில் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சில பதவிகளுக்கு Typewriting, Shorthand, Computer Qualification, Driving Licence, First Aid போன்ற கூடுதல் தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி மற்றும் பொருந்தக்கூடிய பணிகள்
10ஆம் வகுப்பு தேர்ச்சி -பல்வேறு Group IV பதவிகள்
10th + Typewriting-
Typist உள்ளிட்ட பதவிகள்
10th + Shorthand + Typewriting -Steno Typist பதவிகள்
12ஆம் வகுப்பு- குறிப்பிட்ட பதவிகள்
Degree / பட்டப்படிப்பு- குறிப்பிட்ட நிர்வாக / அலுவலக பதவிகள்
குறிப்பிட்ட Diploma / Technical Qualification- தொழில்நுட்பத் தகுதி தேவைப்படும் பதவிகள்
Driving Licence- ஓட்டுநர் தொடர்பான பதவிகள்
கூடுதல் தொழில்நுட்பத் தகுதி -பதவிக்கு ஏற்ப
முக்கியம்:
ஒரு பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட அதிகமான கல்வித் தகுதி பெற்றிருந்தாலும், அந்தத் தகுதி அறிவிக்கை தேதியன்று அல்லது அதற்கு முன்னர் பெற்றதற்கான சான்று இருக்க வேண்டும்.
தமிழ் மொழித் தகுதி
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளன்று போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தமிழை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருப்பது, அல்லது தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி பயின்றிருப்பது, அல்லது TNPSC நடத்தும் இரண்டாம் நிலை மொழித் தேர்வில் தமிழில் தேர்ச்சி பெற்றிருப்பது போன்ற தகுதிகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
வயது வரம்பு விவரங்கள்
TNPSC Group 4 வேலைவாய்ப்பு 2026 வயது வரம்பு 01.07.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
பதவி மற்றும் சமூகப் பிரிவைப் பொறுத்து அதிகபட்ச வயது மாறுபடும்.
வயது வரம்பு:
ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும். குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களின் பிரிவைப் பொறுத்து வயது தளர்வுகள் மற்றும் குறிப்பிட்ட பதவிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு மாறுபடலாம். எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள பதவி வாரியான வயது வரம்பை சரிபார்க்க வேண்டும்.
வயது தளர்வு
SC, ST, MBC/DC, BC, BC(M), Destitute Widow, PwBD, Ex-Servicemen உள்ளிட்ட பிரிவினருக்கு தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி வயது தளர்வு வழங்கப்படுகிறது.
சில பதவிகளில் வயது வரம்பு தொடர்பான சிறப்பு நிபந்தனைகளும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே, விண்ணப்பிக்கும் பதவிக்கான வயது வரம்பை தனியாக சரிபார்க்க வேண்டும்.
சம்பள விவரம்
Group IV பதவிகளுக்கான சம்பளம் பதவிக்கேற்ப Pay Level அடிப்படையில் மாறுபடும்.
அறிவிப்பில் சில பதவிகளுக்கான சம்பள வரம்புகள் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளன.
பதவி / Pay Level சம்பள விவரம்
குறிப்பிட்ட Level 8 பதவிகள்: ₹17,000 – ₹54,060
குறிப்பிட்ட Level 3 பதவி :₹19,500 – ₹62,000
குறிப்பிட்ட Level 3 பதவி: ₹16,600 – ₹52,400
பிற பதவிகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட Pay Level-க்கு ஏற்ப
அறிவிப்பின் பதவி அட்டவணையில் பெரும்பாலான பதவிகளுக்கு Pay Level குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பள அளவு பதவிக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்வு முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எழுத்துத் தேர்வு: OMR தாள்களைப் பயன்படுத்தி ஆஃப்லைன் முறையில்.
ஆவண சரிபார்ப்பு மற்றும் ஆலோசனை (Document Verification and Counselling)
இந்த ஆட்சேர்ப்பில் எழுத்துத் தேர்வு முக்கியமான தேர்வு கட்டமாகும். எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் / தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.
Online Application → Written Examination → Rank / Merit List → Certificate Verification → Counselling → Appointment
பதவிக்கு ஏற்ப Typewriting, Shorthand, Driving Skill போன்ற தொழில்நுட்பத் தகுதிகளும் பரிசீலிக்கப்படலாம்.
எழுத்துத் தேர்வு
தேர்வு முறை: OMR
மொத்த மதிப்பெண்: 300
மொத்த வினாக்கள்: 200
தேர்வு நேரம்: 3 மணி நேரம்
தமிழ் / ஆங்கிலப் பாடத்திட்டம் மற்றும் General Studies / Aptitude பகுதிகள் அறிவிப்பின்படி இடம்பெறும்.
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் தொடர்பான விதிமுறைகளும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விண்ணப்ப கட்டணம்:
One Time Registration Fee – Rs.150/-
Examination Fee – Rs.100/-
Fee Concession:
Ex-Servicemen – Two Free Chances
BCM, BC, MBC / DC – Three Free Chances
Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2026
விண்ணப்பத் திருத்தம்: 09.11.2026 – 11.11.2026
தேர்வு நடைபெறும் நாள்: 10.01.2027
தேவையான ஆவணங்கள்
10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
Degree / Diploma சான்றிதழ் – பதவிக்கேற்ப
பிறந்த தேதி / வயது ஆதாரம்
Community Certificate
PSTM Certificate – பொருந்தினால்
Disability Certificate – பொருந்தினால்
Destitute Widow Certificate – பொருந்தினால்
Ex-Serviceman Certificate – பொருந்தினால்
Typewriting Certificate – பொருந்தினால்
Shorthand Certificate – பொருந்தினால்
Driving Licence – பொருந்தினால்
பிற தொழில்நுட்பத் தகுதி சான்றிதழ்கள்
சமீபத்திய புகைப்படம்
கையொப்பம்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் முதலில் TNPSC இணையதளத்தில்
https://apply.tnpscexams.in/
One Time Registration (OTR) பதிவு செய்து அதன் பின்னர் Group IV தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
முதலில் www.tnpscexams.in இணையதளத்திற்குச் செல்லவும்.
புதிய விண்ணப்பதாரர்கள் One Time Registration (OTR) செய்யவும்.
ஏற்கனவே OTR செய்திருந்தால் உங்கள் Login விவரங்களுடன் உள்நுழையவும்.
Combined Civil Services Examination – IV (Group IV Services) தேர்வைத் தேர்வு செய்யவும்.
தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் பிற தேவையான தகவல்களை பதிவு செய்யவும்.
சமீபத்திய புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றவும்.
தேவையான சான்றிதழ்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் பதிவேற்றவும்.
தேர்வுக் கட்டணச் சலுகை பெறுபவர்கள் உரிய option-ஐ தேர்வு செய்யவும்.
கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் ₹100 தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பத்தை முழுமையாக Preview செய்து அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
Submit செய்து விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளவும்.
குரூப் 4 அதிகாரப்பூர்வ அறிவிப்பு Tamil
https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/tnpsc/PIY0000001/notification/CCSE_Group_IV_Tamil_2026.pdf
குரூப் 4 அதிகாரப்பூர்வ அறிவிப்பு English
https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/tnpsc/PIY0000001/notification/CCSE+_Group_IV_English_2026.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==

No comments:
Post a Comment