ஆயில் இந்தியா நிறுவனத்தில் 32 பணியிடங்களுக்கு ரூ 50,000 முதல் ரூ 2,20,000 வரை ஊதியத்தில் வேலைவாய்ப்பு
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்,
இந்தி அதிகாரி (Hindi Officer),
ரகசிய செயலாளர் (Confidential Secretary),
கண்காணிப்பு ஆராய்ச்சி விஞ்ஞானி (Superintending Research Scientist),
மூத்த கணக்கு அதிகாரி / மூத்த உள் தணிக்கையாளர் (Senior Accounts Officer / Senior Internal Auditor)
மற்றும்
மூத்த அதிகாரி (Senior Officer)
ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
BE/B.Tech, M.E/M.Tech, Ph.D, ICAI அல்லது ICMAI ஆகிய கல்வித்தகுதிகளைக் கொண்ட தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இப்பணியிடங்களுக்கான முதன்மை பணி நியமன இடங்கள் (Job locations) இந்தியா முழுவதும் இருக்கும் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ளவும்.
பதிவுசெய்த விண்ணப்பதாரர்களுக்கு, தேர்வுத் தேதிக்கு சுமார் 4 முதல் 8 நாட்களுக்கு முன்பாக, தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.
கல்வித் தகுதி:
BE / B.Tech / M.E / M.Tech / Ph.D / ICAI / ICMAI
பணிபுரியும் இடம்: இந்தியா முழுவதும்
ஹால் டிக்கெட் பெற்றுக் கொள்ளும் முறை:
மின்னஞ்சல் (Email) மூலம் இணைப்பு அனுப்பப்படும்
(தேர்வுக்கு 4 - 8 நாட்களுக்கு முன்)
காலிப்பிடங்கள்:
சூப்பிரெண்டிங் ரிசர்ச் சயின்டிஸ்ட் (Superintending Research Scientist) –
05 பணியிடங்கள்
சீனியர் ஆபீசர் (மெக்கானிக்கல்) –
14 பணியிடங்கள்
சீனியர் ஆபீசர் (பெட்ரோலியம்) –
04 பணியிடங்கள்
சீனியர் இன்டர்னல் ஆடிட்டர் / சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் –
06 பணியிடங்கள்
இந்தி ஆபீசர் (அதிகாரப்பூர்வ மொழி) – 02 பணியிடங்கள்
கான்ஃபிடன்ஷியல் செக்ரட்டரி / ரகசியச் செயலாளர் (Confidential Secretary) –
01 பணியிடம்
கல்வித் தகுதி
சூப்பிரெண்டிங் ரிசர்ச் சயின்டிஸ்ட் (Superintending Research Scientist)
I.வேதியியலில் (Chemistry) முழுக் காலப் பட்ட மேற்படிப்பு (M.Sc., குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் காலம்) குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்து, வேதியியலில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றிருக்க வேண்டும்;
அல்லது
புவியியல் (Geology) அல்லது பயன்பாட்டுப் புவியியலில் (Applied Geology) முழுக் காலப் பட்ட மேற்படிப்பு (Master’s Degree, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் காலம்) குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்து, புவியியலில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
வேதியியல் பொறியியலில் (Chemical Engineering) முழுக் காலப் பட்ட மேற்படிப்பு (Master’s Degree, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் காலம்) குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்து, வேதியியல் பொறியியலில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றிருக்க வேண்டும்;
அல்லது
பெட்ரோலியப் பொறியியலில் (Petroleum Engineering) முழுக் காலப் பட்ட மேற்படிப்பு (Master’s Degree, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் காலம்) குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்து, பெட்ரோலியப் பொறியியலில் முனைவர் பட்டம் (Ph.D) பெற்றிருக்க வேண்டும்.
மற்றும்
II. சம்மந்தப்பட்ட துறையில் தகுதி பெற்ற பிறகு (Post Qualification) குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மூத்த அதிகாரி (மெக்கானிக்கல்)
குறைந்தபட்சம் 04 ஆண்டுகள் கால அளவு கொண்ட மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் (Bachelor’s Degree), குறைந்தபட்சம் 65% (அறுபத்தி ஐந்து சதவீதம்) மதிப்பெண்களுடன் பெற்றிருக்க வேண்டும்.
(ஆட்டோமேஷன் / ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் / இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் / பவர் / மேனுபேக்சரிங் இன்ஜினியரிங் / ப்ரொடக்ஷன் / மெகாட்ரனிக்ஸ் / மைனிங் / மரைன் இன்ஜினியரிங் / ரோபோடிக்ஸ் இன்ஜினியரிங் போன்ற பிற பிரிவுகள் இதில் அடங்காது).
Senior Officer (Petroleum) –
பெட்ரோலியம் இன்ஜினியரிங் / டெக்னாலஜி பிரிவில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கால அளவு கொண்ட முதுகலைப் பட்டம் மற்றும் இளங்கலை அளவில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
முதுநிலை உள் தணிக்கையாளர் / முதுநிலை கணக்கு அலுவலர்
விண்ணப்பதாரர்கள் ICAI அல்லது ICMAI அமைப்பில் இணை உறுப்பினராக (Associate Membership) இருத்தல் அவசியம்.
இந்தி அலுவலர் (ஆட்சி மொழி)
(அ) இந்தி பாடத்தில் முதுகலை பட்டம் (Post Graduate Degree).
மற்றும்
(ஆ) தகுதி பெற்ற பிறகு, தொடர்புடைய பணியில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகள் பணி அனுபவம்.
ரகசிய செயலாளர் (Confidential Secretary)
செயலகப் பயிற்சி (Secretarial Practice) துறையில் 01/02 ஆண்டுகள் டிப்ளமோவுடன் கூடிய ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு
(Degree)
அல்லது
நவீன அலுவலக மேலாண்மை (Modern Office Management) / செயலகப் பயிற்சி (Secretarial Practice) டிப்ளமோ
அல்லது
நிர்வாக உதவியாளர் (Executive Assistant) டிப்ளமோ
அல்லது
அதற்கு இணையான சான்றிதழ், அத்துடன் கணினி பயன்பாடுகளில் (Computer Applications) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்றும்
தகுதி பெற்ற பிறகு, தொடர்புடைய பணியில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
(14.11.2026 அன்றைய நிலவரப்படி)
மேற்பார்வை ஆராய்ச்சி விஞ்ஞானி
(Superintending Research Scientist) –
37 ஆண்டுகள்
மூத்த அலுவலர் (இயந்திரவியல்)
[Senior Officer - Mechanical] – 27 ஆண்டுகள்
மூத்த அலுவலர் (பெட்ரோலியம்)
[Senior Officer - Petroleum] –
29 ஆண்டுகள்
மூத்த உள் தணிக்கையாளர் / மூத்த கணக்கு அலுவலர்
(Senior Internal Auditor / Senior Accounts Officer) –
29 ஆண்டுகள்
இந்தி அலுவலர் (ஆட்சி மொழி)
[Hindi Officer - Official Language]
29 ஆண்டுகள்
ரகசிய செயலாளர்
(Confidential Secretary)
37 ஆண்டுகள்
வயது வரம்பு தளர்வு:
* எஸ்சி / எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு +5 ஆண்டுகள்
* ஓபிசி (NCL) பிரிவினருக்கு +3 ஆண்டுகள்
மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு:
* பொதுப் பிரிவினருக்கு (UR) +10 ஆண்டுகள்
* ஓபிசி (NCL) பிரிவினருக்கு +13 ஆண்டுகள்
* எஸ்சி / எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு +15 ஆண்டுகள்
* முன்னாள் ராணுவத்தினரான விண்ணப்பதாரர்களுக்கு:
அரசாங்கக் கொள்கையின்படி
Pay Scale:
Superintending Research Scientist
Rs.80,000-2,20,000/-
Senior Officer (Mechanical)
Rs.60,000-1,80,000/-
Senior Officer (Petroleum)
Rs.60,000-1,80,000/-
Senior Accounts Officer / Senior Internal Auditor
Rs.60,000-1,80,000/-
Hindi Officer (Official Language)
Rs.50,000-1,60,000/-
Confidential Secretary
Rs.50,000-1,60,000/-
தேர்ந்தெடுக்கும் முறை:
கணினி சார்ந்த தேர்வு (CBT)
நேர்காணல் (PI)
விண்ணப்பக் கட்டணம்:
ST/SC/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – கட்டணம் இல்லை
இதர விண்ணப்பதாரர்களுக்கு – ₹500 + உரிய வரிகள்
கட்டணம்
செலுத்தும் முறை: இணையவழி (Online)
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கவனமாகப் படித்த பிறகு, ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) இணையதளமான
https://www.oil-india.com/
இன் ‘Careers’ பக்கத்தின் மூலம் 15.10.2026 முதல் 14.11.2026 வரை (இருநாட்களும் உட்பட) இணையவழியில் (Online) விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான தேதிகள்:
இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்:
15.10.2026
இணையவழி விண்ணப்பப் பதிவு முடியும் நாள்:
14.11.2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/7/6702104774.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/101869/cLS13NVBAyZXSMfBYd/Index.html

No comments:
Post a Comment