பூசணி விதையின் முக்கிய நன்மைகள்:பூசணி விதைகளை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்? - Minnalseithi

Latest

Search This Blog

Tuesday, September 1, 2026

பூசணி விதையின் முக்கிய நன்மைகள்:பூசணி விதைகளை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்?

 பூசணி விதையின் முக்கிய நன்மைகள்:பூசணி விதைகளை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும்?


ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சூப்பர் உணவுகளில் ஒன்று பூசணி விதை. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல கொழுப்புகள், நார்ச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் இ போன்ற சத்துக்களை கொண்டது. 


பூசணி விதைகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதா? வறுத்து சாப்பிடுவது நல்லதா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். எப்படி சாப்பிடுவது சிறந் தது என்று பார்ப்போம்.


1. ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்தது


வைட்டமின் இ, பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட ஆன்டி ஆக் சிடென்டுகள் பூசணி விதையில் அதிகம் உள்ளன. இவை உடலில் ஏற்படும் அழற்சியை குறைத்து, செல்கள் சேதம டைவதை தடுக்க உதவக்கூடும்.


2. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்


பூசணி விதையில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவிடும். இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவக்கூடும்.


3.நல்ல தூக்கத்திற்கு உதவும்


பூசணி விதைகளில் 'டிரிப்டோபன்' என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் செரோட்டோனின் உற்பத்திக்கு உதவுவதால், தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தக்கூடும்.


4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்


வைட்டமின் இ மற்றும் துத்தநாகம் இருப்ப தால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்ப டுத்தவும் உதவும். குறிப்பாக பருவகால காய்ச்சல் மற்றும் தொற்றுகள் பரவும் காலங் களில் பூசணி விதையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


5. செரிமானத்திற்கு நல்லது


பூசணி விதையில் நார்ச்சத்து நிறைந்திருப்ப தால் மலச்சிக்கலை தடுக்கவும், குடல் இயக் கத்தை சீராக வைத்திருக்கவும் உதவும். போதுமான அளவு தண்ணீர் குடித்தால் கூடு தல் பலன் கிடைக்கும்.


6. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்


சில ஆய்வுகளின்படி, பூசணி விதைகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூ டும். குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோய் உள் ளவர்கள் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக பூசணி விதையை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம்.


எப்படி சாப்பிடலாம்?


ஆரோக்கியமான நபர்கள், பச்சையாகவோ அல்லது லேசாக வறுத்தோ பூசணி விதை களை உட்கொள்ளலாம். தினமும் சுமார் 28 கிராம் (சிறு கைப்பிடி அளவு) சாப்பிடுவது போதுமானது. பூசணி விதைகளை சாலட் களில் தூவியோ, தயிரில் கலந்தோ, ஸ்மூத்திகளில் சேர்த்தோ, உட்கொள்ளலாம்.


ஊறவைத்தும் உட்கொள்ளலாமா?


ஊட்டச்சத்து உறிஞ்சுதலை அதிகரிக்கச்செய் யவும், செரிமானம் எளிதாக நடைபெறவும் விரும்பினால் பூசணி விதைகளை இரவு முழுவதுமோ அல்லது 6 மணிநேரமோ ஊற வைத்து உட்கொள்ளலாம். ஊறவைக்கும் போது பைடிக் அமிலத்தின் தாக்கம் ஓரளவு குறைவதால், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களின் உறிஞ்சுதல் மேம்பட உதவக்கூடும்.


இதனால் விதைகள் வயிற்றுக்கு இதமானதாக அமையும். அதேவேளையில் பச்சை யான விதைகள் அதிக சத்துக்கள் நிறைந் தவை. ஆனால் சிலருக்கு வயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வையோ அல்லது வயிறு உப்புசத்தையோ ஏற்படுத்தக்கூடும். உங்கள் உடல் பூசணி விதைகளை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறது என்பதை கவனித்து அதற்கேற்ப உட்கொள்வது நல்லது.


உப்பு சேர்க்காத, எண்ணெய் இல்லாமல் அல்லது மிகக்குறைந்த எண்ணெய்யில் லேசாக வறுத்த பூசணி விதைகளே சிறந்தவை. சிறுநீரக நோயாளிகள், பொட்டாசியம் கட்டுப்பாடு தேவைப்படுபவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் உட்கொள்வது அவசியமானது.


பச்சை பூசணி விதையின் நன்மைகள்


பூசணியை பச்சையாக சாப்பிடும்போது வைட்டமின் இ போன்ற வெப்பத்தில் சிதை யக்கூடிய சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். அதேவேளையில் சுத்தமாக பதப்படுத் தப்படாத அல்லது முறையாக சேமித்துவைக்கப்படாத பூசணி விதைகளில் சால்மொனெல்லா, இ.கோலை போன்ற பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும். எனவே தரமான, சுத்தமாக பதப்படுத்தப்பட்ட விதைகளையே தேர்வு செய்து குளிர்ச்சியான அல்லது உலர்ந்த இடத்தில் சேமித்து வைத்து பயன்ப டுத்த வேண்டும்.


வறுத்த பூசணி விதையின் நன்மைகள்


பூசணி விதையை வறுத்து சாப்பிடும்போது ருசியும், மொறுமொறுப்பான தன்மையும் அதிகரிக்கும். அதிலும் மிதமான வெப்பத்தில் வறுக்கும்போது சில ஆன்டி ஆக்சிடென்டு செயல்பாடுகள் அதிகரிக்கக்கூடும். செரிமானம் சற்று எளிதாக நடைபெற உதவக்கூடும். அதிக வெப்பத்திலோ, அதிக எண்ணெய், உப்பு சேர்த்து வறுப்பதை தவிர்க்க வேண் டும். ஏனெனில் சில ஊட்டச்சத்துக்கள் குறையக்கூடும்.


எது சிறந்தது?


பச்சை மற்றும் வறுத்த பூசணி விதைகள் இரண்டுமே ஆரோக்கியமானவை. அதிக சத் துக்களை பெற விரும்பினால் பச்சை விதைகள் சிறந்த தேர்வாக இருக்கும். ருசியையும், எளிதான செரிமானத்தையும் விரும்பினால் லேசாக வறுத்த விதைகளை தேர்வு செய்யலாம். எந்த வகை விதையாக இருந்தாலும், அளவோடு சாப்பிடுவதுதான் அதிக பலன் தரும். விதை ஒவ்வாமை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள் ஆரம்பத்தில் குறைந்த அளவில் சாப்பிட்டு, உடலின் எதிர்வினையை கவனிப்பது நல்லது.

No comments:

Post a Comment