தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாவட்ட நலவாழ்வு சங்கம், தேசிய நலவாழ்வு இயக்கத்தின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவகத்தில் வரவேற்கப்படுகின்றன.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர, இதர மாவட்டங்களில் உள்ள மாவட்ட நலவாழ்வு சங்கங்களின் கீழ்செயல்படும் அனைத்து சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்பப்படவுள்ள 4,724 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் செவிலியர் பட்டய படிப்பு(ஜிஎன்எம்) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம்(பி.எஸ்சி நர்சிங்) பெற்று தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். வயதுவரம்பு 25.9.2026-ன்படி 50க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.21,000 சம்பளம் வழங்கப்படும்.
மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: சென்னை - 512, சேலம் - ஆத்தூர் - 231, திருச்சி - 205, திருவண்ணாமலை - செய்யாறு - 197, கோவை - 193, திருவள்ளூர் - பூந்தமல்லி - 178, கடலூர் - 172, ஈரோடு - 169, தஞ்சாவூர் - 166, திண்டுக்கல் - பழனி - 161, புதுக்கோட்டை - அறந்தாங்கி- 158, திருவாரூர் - 156, தருமபுரி - 152, மதுரை - 147, விருதுநகர் - சிவகாசி - 129, நாமக்கல் - 128, தூத்துக்குடி - கோவில்பட்டி - 126, சிவகங்கை - 120, தேனி - 119, கிருஷ்ணகிரி - 111, நீலகிரி - 111, திருநெல்வேலி - 101, கரூர்- 99, விழுப்புரம் - 94, தென்காசி - 76, வேலூர் - 75, கள்ளக்குறிச்சி - 74, நாகப்பட்டினம் - 70, ராமநாதபுரம் - 66, பரமக்குடி - 65, திருப்பத்தூர் - 65, ராணிப்பேட்டை - 64, அரியலூர் - 61, காஞ்சிபுரம் - 48, பெரம்பலூர் - 45, மயிலாடுதுறை - 41, நாகர்கோவில் - 39.
தகுதியானோர் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப படிவங்களை தேசிய நலவாழ்வு இயக்கத்தின் https://nhm.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும், அந்தந்த மாவட்ட சுகாதார அலுவலருக்கு செப்.25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
https://nhm.tn.gov.in/en/node/6228
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.09.2026 at 05.00 PM
விண்ணப்பங்கள் மதிப்பாய்வு: 03.10.2026
நியமன ஆணை அனுப்பப்படும் தேதி: 05.10.2026
விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ Application Form-ஐ Download செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தை முழுமையாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யவும்.
தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் ஆவணங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு (District Health Society) அனுப்பவும்.
விண்ணப்பம் 25.09.2026 மாலை 05.00 மணிக்குள் சென்றடைய வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://www.nhm.tn.gov.in/en/node/6228
விண்ணப்ப படிவம் பெற
https://nhm.tn.gov.in/sites/default/files/2026-9/02_Model_Application_Form_Staff_Nurse.pdf
மாவட்ட வாரியான Vacancy Details
https://nhm.tn.gov.in/sites/default/files/2026-9/Staff%20Nurse%20Vacancy_page-0001%20(1).jpg
மாவட்ட வாரியான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்:
சேலம் & ஆத்தூர்
https://salem.nic.in/notice_category/recruitment/
திருவண்ணாமலை & செய்யாறு
https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment-en/
கோயம்புத்தூர்
https://coimbatore.nic.in/notice_category/recruitment/
திருவள்ளூர் & பூந்தமல்லி
https://tiruvallur.nic.in/notice_category/recruitment/
கடலூர்
https://cuddalore.nic.in/notice_category/recruitment/
ஈரோடு
https://erode.nic.in/notice_category/recruitment/
தஞ்சாவூர்
https://thanjavur.nic.in/notice_category/recruitment/
திண்டுக்கல் & பழனி
https://dindigul.nic.in/notice_category/recruitment/
திருவாரூர்
https://tiruvarur.nic.in/notice_category/recruitment/
தர்மபுரி
https://dharmapuri.nic.in/notice_category/recruitment/
நாமக்கல்
https://namakkal.nic.in/notice_category/recruitment/
தூத்துக்குடி & கோவில்பட்டி
https://thoothukudi.nic.in/notice_category/recruitment/
சிவகங்கை
https://sivaganga.nic.in/notice_category/recruitment/
கிருஷ்ணகிரி
https://krishnagiri.nic.in/notice_category/recruitment/
நீலகிரி
https://nilgiris.nic.in/notice_category/recruitment/
திருநெல்வேலி
https://tirunelveli.nic.in/notice_category/recruitment/
விழுப்புரம்
https://viluppuram.nic.in/notice_category/recruitment/
தென்காசி
https://tenkasi.nic.in/notice_category/recruitment/
வேலூர்
https://vellore.nic.in/notice_category/recruitment/
கள்ளக்குறிச்சி
https://kallakurichi.nic.in/notice_category/recruitment/
இராமநாதபுரம்
https://ramanathapuram.nic.in/notice_category/recruitment/
திருப்பத்தூர்
https://tirupathur.nic.in/notice_category/recruitment/
அரியலூர்
https://ariyalur.nic.in/notice_category/recruitment/
பெரம்பலூர்
https://perambalur.nic.in/notice_category/recruitment/
மயிலாடுதுறை
https://mayiladuthurai.nic.in/notice_category/recruitment/

No comments:
Post a Comment