யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் 225 பணியிடங்களுக்கு ரூ 1,10,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு - Minnalseithi

Latest

Search This Blog

Wednesday, September 9, 2026

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் 225 பணியிடங்களுக்கு ரூ 1,10,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் 225 பணியிடங்களுக்கு ரூ 1,10,000 வரை ஊதியத்தில் வேலை வாய்ப்பு


மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மையான பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நாடு முழுவதும் உள்ள தனது கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர் (Administrative Officers Scale-I) பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பொதுக் காப்பீட்டுத் துறையில் ஓர் உயர் அதிகாரி அந்தஸ்துடன் நிலையான மத்திய அரசுப் பணியைத் தொடங்க விரும்பும் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம்  அல்லது முதுகலை பட்டம் முடித்த பட்டதாரிகளுக்கு இது ஒரு மிகச்சிறந்த நல்வாய்ப்பாகும்.


 தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 28.09.2026-க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


மொத்தம் 225 காலிப்பணியிடங்கள் பின்வரும் இரு பிரிவுகளின் கீழ் இந்தியா முழுவதும் நிரப்பப்பட உள்ளன.


பதவியின் பெயர்: Administrative Officers (Scale-I)


பிரிவுகள்:


Administrative Officer (Generalists)


Administrative Officer (Hindi Officers)


மொத்த காலியிடங்கள்: 225 (இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவார்கள்)


பணியின் தன்மை:


 நிரந்தர மத்திய அரசு பொதுத்துறை நிறுவனப் பணி (Regular Basis)


கல்வித் தகுதி


Administrative Officer (Generalists):


 அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் (Engineering, Arts, Science, Commerce, Agriculture, Data Science போன்றவை) இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


 (SC / ST / PwBD பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள் போதுமானது).


Administrative Officer (Hindi Officers):


 இந்தி அல்லது ஆங்கிலப் பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் (Master’s Degree) பெற்றிருக்க வேண்டும் (SC / ST / PwBD பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள் போதுமானது).


 மேலும் பட்டப்படிப்பு அளவில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டு படித்திருப்பது கட்டாயமாகும்.


சம்பள விவரங்கள்


தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு மத்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவன விதிகளின்படி தொடக்க நிலை அடிப்படை சம்பளம், அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA), நகர ஈட்டுப்படி (CCA) மற்றும் சிறப்பு சலுகைகள் சேர்த்து வழங்கப்படும்:


மாத ஊதியம்: தொடக்க நிலையில் மாதம் சுமார் ரூ. 1,10,000/- வரை கிடைக்கும்.


இதனுடன் மருத்துவக் காப்பீடு, விடுப்பு பயணச் சலுகை (LTC) மற்றும் பணிக்கொடை போன்ற சலுகைகளும் உண்டு.


வயது வரம்பு மற்றும் தளர்வுகள் (08.09.2026 அன்றைய தேதியின்படி)


வயது வரம்பு:

 விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.


மத்திய அரசு விதிகளின்படி வயது தளர்வுகள்:


SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள் வரை தளர்வு (35 வயது வரை).


OBC (NCL) பிரிவினர்: 3 ஆண்டுகள் வரை தளர்வு (33 வயது வரை).


மாற்றுத்திறனாளிகள் – PwBD (General / EWS): 10 ஆண்டுகள் தளர்வு.


மாற்றுத்திறனாளிகள் – PwBD (OBC): 13 ஆண்டுகள் தளர்வு.


மாற்றுத்திறனாளிகள் – PwBD (SC / ST): 15 ஆண்டுகள் தளர்வு.


விண்ணப்பக் கட்டணம்


SC / ST / முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen) / மாற்றுத்திறனாளிகள் (PWD): ரூ. 250/- (அஞ்சல் மற்றும் சேவைக் கட்டணம்).


இதர பிரிவினர் (General / OBC / EWS): ரூ. 1,000/- ஆன்லைன் வாயிலாகச் செலுத்த வேண்டும்.


தேர்வு செய்யும் முறைகள் (Selection Process)


முதல்நிலைத் தேர்வு (Tier-I: Preliminary Examination):


 கொள்குறி வகை ஆன்லைன் கணினித் தேர்வு (தேர்வு நாள்: 22.10.2026).


முதன்மைத் தேர்வு (Tier-II: Main Examination):


 கொள்குறி வகை கணினித் தேர்வு மற்றும் விவரிக்கும் வகை ஆங்கிலத் தேர்வு (Online Objective + Descriptive Test) (தேர்வு நாள்: 30.11.2026).


நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு:


 முதன்மைத் தேர்வில் தகுதி பெறும் நபர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு இறுதிப் பணி நியமனம் வழங்கப்படும்.


ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை 


முதலில் UIIC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.uiic.co.in பக்கத்திற்குச் செல்லவும்.


முகப்புப் பக்கத்தில் உள்ள Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.


அங்குள்ள “Administrative Officers (Scale I) – Generalists and Hindi Officers – 2026” என்ற அறிவிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.


“Click Here for New Registration / Apply Online” இணைப்பைக் கிளிக் செய்து பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யவும்.


உருவாக்கப்பட்ட Registration Number மற்றும் Password கொண்டு Login செய்து, சுயவிவரங்கள், கல்வித் தகுதி மற்றும் தேர்வு மைய விருப்பங்களைச் சரியாக நிரப்பவும்.


பாஸ்போர்ட் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான கல்விச் சான்றிதழ்களை அறிவுறுத்தப்பட்ட அளவில் ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.


உங்களது பிரிவிற்குரிய விண்ணப்பக் கட்டணத்தை நெட் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது UPI வழியாகச் செலுத்தவும்.


அனைத்து தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து ‘Final Submit’ செய்யவும்.


சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் கட்டண ரசீதைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண


https://uiic.co.in/web/sites/default/files/Recruitment_UiiC/UIIC-AO-notification-2026%20final.pdf


ஆன்லைனில் விண்ணப்பிக்க


https://uiic.co.in/web/recruitment/details/1620

No comments:

Post a Comment