சுவையான தேங்காய்ப்பால் பணியாரம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
ரவை -150 கிராம்
தேங்காய்ப்பால் - 1 கப்
சர்க்கரை -1 கப்
ஏலக்காய் -4
உப்பு - சிறிதளவு
நெய் 200 கிராம்
செய்முறை:
ரவையை தேங்காய்ப்பாலில் போட்டு அரைமணி நேரம் ஊற வைத்து, மிக்சியில் இடவும். அதனுடன் ஏலக்காய் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
அரைத்த மாவில் சர்க்கரை, சிறிதளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
அரை மணி நேரம் கழித்து அந்த மாவில் சூடான நெய் ஒரு குழிகரண்டி ஊற்றவும். பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து அடுப்பைப் பற்ற வைக்கவும்.
மிதமான தீயில் வைத்து, கரைத்து வைத்திருக்கும் மாவை பணியாரச் சட்டியின் எல்லா குழிகளிலும் ஊற்றவும்.
பின்பு இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
இந்த தேங்காய்ப்பால் பணியாரம் மிகவும் சுவையாக இருக்கும்.

No comments:
Post a Comment