மத்திய அரசின் வருமான வரித்துறையில் கேண்டீன் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு
மத்திய அரசின் வருமான வரித்துறையில் கேண்டீன் உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடக்கவுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
நாட்டின் பல பாகங்களில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் 7 கேன்டீன் உதவியாளர் (Canteen Attendant) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள், ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 31, 2026 வரை இந்தப் 'குரூப் சி' (Group C) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வருமான வரித்துறையில் உள்ள காலிப்பண்கியிடங்கள், கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு ஆகிய விவரங்களை இங்கே காணலாம்.
பதவி:
கேண்டீன் உதவியாளர்
சம்பளம்: மாதம் ரூ.18,000 - ரூ 56,000
காலியிடங்கள்: 07
கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 25 வரை
வயது தளர்வு:
SC / ST: 5 ஆண்டுகள்
OBC: 3 ஆண்டுகள்
PwBD (General / EWS): 10 ஆண்டுகள்
PwBD (SC / ST): 15 ஆண்டுகள்
PwBD (OBC): 13 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்
இப்பணியிடத் தேர்வின் முக்கிய அம்சங்களில் ஒன்று, இதற்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை என்பதுதான்.
தேர்வு முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் வழிகளில் தேர்வு செய்யப்படுவார்கள்
தகுதிப் பட்டியல் தயாரிப்பு (shortlisting),
எழுத்துத் தேர்வு,
திறன் தேர்வு
மற்றும்
ஆவணச் சரிபார்ப்பு
யார் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பதாரர்கள் இந்தியக் குடிமக்களாக இருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 31, 2026 அன்று 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
அரசு விதிகளின்படி, தகுதியுள்ள இடஒதுக்கீட்டுப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்புத் தளர்வு வழங்கப்படும்.
வயது வரம்புத் தளர்வு
OBC விண்ணப்பதாரர்களுக்கு மூன்று ஆண்டுகள்
SC மற்றும் ST விண்ணப்பதாரர்களுக்கு ஐந்து ஆண்டுகள்
மாற்றுத்திறனாளிகள் (PwBD), முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கும் விதிமுறைகளின்படி வயது வரம்புத் தளர்வு உண்டு.
கேன்டீன் உதவியாளர் பணியானது 'குரூப் சி', அரசிதழ் பதிவு பெறாத (non-gazetted) மற்றும் அமைச்சகம் சாராத (non-ministerial) பிரிவின் கீழ் வருகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தகுதிகாண் காலம் (probation period) இருக்கும்.
தேர்வு செயல்முறை
முதலில், 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் எழுத்துத் தேர்வுக்காக 280 விண்ணப்பதாரர்களைத் துறை தேர்வு செய்யும். அதாவது, ஒவ்வொரு காலிப் பணியிடத்திற்கும் 40 விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்கான 40 கொள்குறி வகை (multiple-choice) கேள்விகள் இடம்பெறும்.
வினாத்தாளுக்குப் பதிலளிக்க விண்ணப்பதாரர்களுக்கு 30 நிமிடங்கள் வழங்கப்படும்.
ஆங்கிலப் புரிதல் திறன், இந்தி, உணவு மற்றும் ஊட்டச்சத்து, கணிதம் மற்றும் சுகாதாரம் மற்றும் தூய்மை ஆகிய தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும்.
தவறான பதில்களுக்கு 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும் (negative marking).
எழுத்துத் தேர்வுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் 60 மதிப்பெண்களுக்கான திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
இத்தேர்வில் பானங்கள் மற்றும் உணவைத் தயாரித்தல், உணவைக் கையாளுதல் மற்றும் பரிமாறுதல், மற்றும் தூய்மையைப் பராமரித்தல் ஆகியவற்றில் அவர்களின் செயல்முறைத் திறன்கள் சோதிக்கப்படும்.
ரூ. 56,900 வரை ஊதியம்
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் 7-வது ஊதியக் குழுவின் கீழ் 'ஊதிய நிலை 1'-ல் (Pay Level 1) பணியமர்த்தப்படுவார்கள். இதற்கான ஊதிய விகிதம் மாதம் ரூ. 18,000 முதல் ரூ. 56,900 வரை இருக்கும்.
அடிப்படை ஊதியத்துடன், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் பயணப்படி போன்ற பொருந்தக்கூடிய படிகளையும், மத்திய அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் பிற சலுகைகளையும் ஊழியர்கள் பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
முதலில் அதிகாரப்பூர்வ Canteen Attendant Recruitment 2026 Portal-க்கு செல்லவும்.
“Download Notification” என்பதை கிளிக் செய்து முழு அறிவிப்பையும் படிக்கவும்.
தகுதி இருந்தால் “Register Here” என்பதை கிளிக் செய்து புதிய Registration செய்யவும்.
Registration முடிந்த பிறகு லாக் இன் செய்து Application Form-ஐ பூர்த்தி செய்யவும்.
அதன் பிறகு கேட்கப்படும் கல்வித் தகுதி, தனிப்பட்ட விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை அப்லோட் செய்யவும்.
Form-ஐ Submit செய்த பிறகு Application/ Registration Number மற்றும் PDF/Print copy-ஐ பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு காண
https://incometaxmpcg.gov.in/canteen-recruitment-2026/assets/Notification.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்க
https://incometaxmpcg.gov.in/canteen-recruitment-2026/

No comments:
Post a Comment